“இதை கேட்டேன்.. உடனே கட்டிகிட்டா…” இப்படித்தான் காதலுக்கு ஓகே சொன்னாராம் காயத்ரி யுவராஜ்..!

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ். தென்றல், அரண்மனை கிளி, சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

நேர்காணல் ஒன்றில், காயத்ரியிடம் காதலை புரபோஸ் செய்தது குறித்து யுவராஜ் கூறியதாவது, நான் காயத்ரி மேல ஸ்பெஷலா அக்கறை காட்டுவேன். எப்பவுமே காயத்ரிக்கு தேவையானது இருக்கான்னு பார்த்துக்குவேன்.

அதே மாதிரி ரிகர்சல் முடிச்சிட்டு காயத்ரி வீட்டுக்கு போறப்போ, பையன் ஒருவனை பின்னால் அனுப்பி விடுவேன். அதாவது வீட்டுக்கு பத்திரமா போய் சேர்த்துட்டாங்களான்னு தெரிஞ்சுக்கறதுக்காக.

அதாவது காயத்ரியை ஆட்டோவில் ஏத்தி விட்டுட்டு, பின்னால பைக்குல பையனை அனுப்பி விடுவேன். இப்படி இருக்கிறப்போ ஒருநாள் அன்னிக்கு ஏதாவது சொல்லணுமுன்னு தோணுச்சு.

இந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லிருவோம். கூட்டீட்டு போயிருவோம்ன்னு தோணியிருச்சு. அன்னிக்கு அந்த பையன் கிட்ட நீ வேணாண்டா நானே கூட்டீட்டு போறேன்னு சொல்லிட்டேன்.

அப்படி சொல்லிட்டு ரெண்டு பேரும் அன்னிக்கு பைக்குல போறோம். அப்போ, உனக்கு என்னை பிடிக்குமா,ன்னு கேட்டேன். ம் பிடிக்கும் மாஸ்டர் என்று காயத்ரி சொன்னாள். அப்போது என்னை மாஸ்டர் என்றுதான் கூப்பிடுவாள்.

என்னை கட்டிக்கிறியா, ன்னு கேட்டேன். ரெண்டு செகன்ட்ஸ் சைலண்ட் ஆக இருந்தாள். பிறகு ம் என்றாள். அப்போ கட்டிக்கோ என்றேன். உடனே என்னை பின்புறம் இருந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

இப்படித்தான் எங்கள் பிரபோஸ் நடந்தது. அடுத்தநாளே வீட்டுக்கு சென்று காயத்ரி அம்மாவிடம் பேசினேன் என்று கூறியிருக்கிறார் யுவராஜ். அருகில் இருந்த காயத்ரி, இவர் காதலை சொல்வதற்கு முன்பே, எனக்கும் அவர் மீது காதல் இருந்தது என்று சொல்லி இருக்கிறார்.

என்னை பிடிச்சிருக்கா என்று கேட்டேன், உடனே கட்டிக்கிட்டா. அப்படிதான் காதலுக்கு ஓகே சொன்னாள் காயத்ரி என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் காயத்ரியின் கணவர் யுவராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version