நிஜ வாழ்கையில் கவுண்டமணி இப்படியா..? ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!

தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் கவுண்டமணியின் காமெடி சாம்ராஜ்ஜியம் நடத்தினார் என்றால் அது மிகையல்ல.

அவரது துடுக்குத்தனமான பேச்சும், எதையுமே நக்கலடிக்கும் அவரது பாணியும் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது.

சினிமாவில் கவுண்டமணி நடிக்க வந்த போதே, அவரது வயது 40 ஐ கடந்திருந்தது என்று சொல்லப்பட்டது. எனினும் வயது தாண்டி சாதித்தவர் கவுண்டமணி.

16 வயதினிலே படத்தில் பத்த வெச்சுட்டியே பரட்ட என ரஜினியை பார்த்து அவர் பேசிய ஒரு டயலாக் அவரது அறிமுகமாக இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, கவுண்டமணி பேசும் டயலாக்கை ரசித்து கேட்கவே ரசிகர் கூட்டம் தியேட்டர்களுக்கு படையெடுத்தது.

கவுண்டமணி செந்தில் கூட்டணி, தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத, தொடர்ந்து வெற்றி பெற்ற மிகப்பெரிய கூட்டணியாக அமைந்தது.

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜீத், சிலம்பரசன் என அவர் ஜோடி சேர்ந்து காமெடி செய்யாத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு காமெடியில் கொடி கட்டி பறந்தவர்.

குறிப்பாக கரகாட்டக்காரன், சின்னக் கவுண்டர், எஜமான், இந்தியன், கோவில் காளை, உத்தம ராசா, மன்னன், பிரம்மா, சின்னதம்பி, உள்ளத்தை அள்ளித்தா என கவுண்டமணி பல படங்களில் கலக்கியிருப்பார்.

கவுண்டமணி..

கவுண்டமணியை பொருத்த வரை எந்த நடிகரையும் வெகு எளிதாக கிண்டலடித்து விடுவார். ரஜினியை பாபா படத்திலும், இந்தியன் படத்தில் கமலையும் கலாய்த்திருப்பார்.

இதுவே மற்ற காமெடி நடிகர்களாக இருந்தால் ரஜினி, கமல் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கவுண்டமணி என்றால், அவர்களும் சிரித்து ஏற்றுக்கொள்வார்கள்.

குறிப்பாக சத்யராஜ், கவுண்டமணி காம்பினேஷன் எப்போதுமே மிக அருமையாக இருந்து விடுகிறது. பல படங்களில் இவர்களது கூட்டணி காமெடி அசத்தலாக ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சுகன்யா..

நடிகை சுகன்யா, கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்தியன், மகாநதி, சின்னக்கவுண்டர், திருமதி பழனிசாமி, சின்ன மாப்ளே என பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

குறிப்பாக கவுண்டமணி நடித்த பல படங்களில் நடிகை சுகன்யா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுகன்யா, நடிகர் கவுண்டமணியை படத்தில் காமெடியாக நடிப்பவராக மட்டுமே பலரும் நினைக்கின்றனர்.

நிஜ வாழ்க்கையில் கவுண்டமணி நிறைய விஷயங்களை அறிந்தவர். குறிப்பாக சினிமா சார்ந்த அறிவு அவருக்கு அதிகம். ஆங்கில படங்கள், ஆங்கில நடிகர், நடிகையர் பற்றி எல்லாம் பல விஷயங்களை பேசுவார்.

என்னையும் சில நல்ல ஆங்கில படங்களை சொல்லி பார்க்குமாறு கூறுவார். நடிப்பை தாண்டியும் அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது.

நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் என்னிடம் ‘வாம்மா வாம்மா’ என்று அன்பாக அழைத்து பேசி அன்பாக பழகுவார். அவருடன் நடிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், என்று கூறியிருக்கிறார் நடிகை சுகன்யா.

நிஜவாழ்க்கையில் கவுண்டமணி இவ்வளவு திறமைகள் நிறைந்தவர் என்ற ரகசியத்தை நடிகை சுகன்யா உடைத்து விட்டார் என்றாலும், கவுண்டமணி ரசிகர்களுக்கு இது பெருமைதான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version