கௌவுதமிக்கு கெட் அவுட் சொன்ன கமல்.. இப்போ தஞ்சம் அடைந்திருப்பது இந்த நடிகர் மனைவியிடம் தான்..!

உலகநாயகன் கமலஹாசனை பொறுத்த வரை திரைத்துறையில் ஜாம்பவானாக இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை இன்னும் பேசும் பொருளாகவே உள்ளது.

கமல் இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்கும் போது பல நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார். இதனை அடுத்து நடிகை கௌதமியுடன் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப் முறையில் பல ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

அப்போது கமலஹாசனின் சினிமாவிற்கும், பிசினஸுக்கும் பக்க பலமாக இருந்தவர் நடிகை கௌதமி. எனினும் கௌதமியின் பிரிவுக்குப் பிறகு கமலின் சினிமாவையும், பிசினஸ் செய்யும் ஒரு சேர பார்த்துக் கொள்ளக்கூடிய நம்பிக்கை வாய்ந்த நபராக, ஏன் கமலுக்கு ஒரு வலது கையாக இருப்பது ஒரு டான்ஸ் மாஸ்டரின் மனைவி என்றால் நீங்கள் நம்புவீர்களா?

இந்த டான்ஸ் மாஸ்டரின் மனைவி கமலுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியன் 2 மற்றும் தக் லைப் படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிகிறார். இந்த டான்ஸ் மாஸ்டரின் மனைவி, ராஜ் டிவியில் ப்ரொடியூசர் ஆக இருந்ததோடு மட்டுமல்லாமல் பல படங்களில் ஆடையை வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.

இனி இவர் தான் எல்லாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கமலஹாசனின் சினிமா கேரியரையும், பிசினஸையும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

எனவே கௌதமியிடம் இருந்த மொத்த கண்ட்ரோலும், தற்போது இந்த டான்ஸ் மாஸ்டரின் மனைவியிடம் தான் உள்ளது என சொல்லக் கூடிய வகையில் கமலின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி இருக்கக்கூடிய இவரிடம் எல்லா பொறுப்புகளையும் கமல் ஒப்படைத்து விட்டார்.

அந்த டான்ஸ் மாஸ்டரின் மனைவி யார் என்று நீங்கள் யோசிப்பீர்கள். அவர் வேறு யாருமில்லை டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி அமிர்தா ராம் தான். மேலும் அமிர்தா ராம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக மாறி வித்தியாசமான ஆடைகளை செய்து கொடுத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version