கணவருடன் படுநெருக்கமாக நடிகை ஹன்சிகா.. கிருஸ்துமஸ் ரொமான்ஸாம்..!

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக மாறி விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து முன்னணி நடிகையாக, ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனால் தமிழக இளைஞர்களை மட்டும் அல்ல தென்னிந்திய இளைஞர்களையும் கட்டிப் போட்டவர். தமிழில் முன்னணி நாயகர்களாக திகழும் பல நடிகர்களோடு இணைந்து இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதே ஆண்டு ஜெயம் ரவிக்கு ஜோடியாக எங்கேயும் காதல் படத்தில் நடித்ததோடு, விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம் படத்திலும் நடித்திருக்கிறார்.

மிகக் குறுகிய காலத்திலேயே உச்ச கட்ட நடிகையாக மாறிய ஹன்சிகா அடுத்தடுத்து ஆர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக மாறி திரை உலகில் படு பிஸியாக இருந்தார்.

வாலு திரைப்படத்தில் சிம்புவோடு இணைந்து நடிக்கும் போது காதல் வலையில் சிக்கிவிட்டார் என்ற கிசுகிசுக்கள் எழுந்தது. அத்தோடு சில நாட்கள் இவர்கள் டேட்டிங் சென்றதன் காரணத்தால் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது போல விஷயங்கள் வெளி வந்தது.

எனினும் அவர்கள் காதல் பிரேக்கப் ஆகி விட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளி வந்தது. பப்ளி நடிகையாக இருந்த இவர் சமீபத்தில் உடல் எடையை வெகுவாக குறைத்து விட்டார். தற்போது ஸ்லிம் பிட் நடிகையாக மாறி இருக்கும் இவரிடம் ஏராளமான படங்கள் கைவசம் உள்ளது.

இந்நிலையில் இவர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது தோழியின் கணவரான சோகைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகப் பிரம்மாண்டமான முறையில் இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு அடிக்கடி கணவருடன் வெளிநாடு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது கிறிஸ்துமஸை ஒட்டி சுஸர்லாந்து நாட்டிற்கு வெகேஷனுக்கு சென்றிருக்கிறார். அங்கு கிறிஸ்துமஸை சிறப்பான முறையில் கொண்டாடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டு வைரலாக்கிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version