என்ன ஆச்சு.. விகாரமாக.. எலும்புக்கூடி போல நடிகை ஹன்சிகா..!

பாலிவுட் படங்களில் அறிமுகமாகி தெலுங்கு, கன்னட மொழிகளில் கதாநாயகி அந்தஸ்தோடு திரை உலகில் நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா மோத்வானி தமிழ் திரை உலகில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த மாப்பிள்ளை படத்தில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதே ஆண்டில் ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் தமிழில் முன்னணி நாயகி அந்தஸ்தை பிடித்ததோடு விஜய், சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார் இதனை அடுத்து இவர் சிம்புவோடு காதலில் விழுந்து விட்டதாக செய்திகள் பரவியது.

மேலும் சிவகார்த்திகேயனோடு இணைந்து டார்லிங் டம்பக்கு என்ற பாடலில் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தினார். கொழு, கொழு என்ற உடல் அமைப்பை கொண்டிருந்த இவர் தமிழ் ரசிகர்களால் குட்டி குஷ்பூ என்று அழைக்கப்பட்டார்.

ஆனால் திடீர் என்று உடல் எடையை குறைத்து ஒல்லியாகி மாறிய இவர் தனது ஐம்பதாவது படமான மகா படத்தில் நடித்தார். மேலும் யாரும் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த ஆண்டு தனது தோழியின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

திருமணத்திற்கு பிறகும் சில திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா தற்போது பார்க்க படு ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது 105 மினிட்ஸ், ரவுடி பேபி, கேரண்டி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவரது புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அநியாயத்திற்கு ஒல்லியாகிவிட்டார் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி ஒல்லியாகி போறீங்க என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

நீங்களும் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால் அவர் எந்த அளவுக்கு உடலை ஸ்லிம்மாக மாற்றிவிட்டார் என்பது எளிதில் புரிந்து விடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version