“வாரத்துல ஒரு நாள் மாலை 6 மணி வரை இதை பண்ண மாட்டேன்…” – ரகசியம் உடைத்த “எதிர்நீச்சல்” ஹரிப்பிரியா..!

பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா சமீபத்தில் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் அவருடைய சரும அழகு குறித்தும் சரும பொழிவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பெண்கள் தங்களுடைய சருமத்தை பொழிவாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..? என்று தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார்.

பொதுவாக எல்லா நடிகைகளிடம் எழுப்பப்படும் கேள்விதான் இது, என்றாலும் கூட அப்படி கேள்வி எழுப்பும் போதெல்லாம்.. நடிகைகள் பலரும்.. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.. சந்தோஷமாக இருக்க வேண்டும்.. சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.. இப்படி செய்தால் முகம் பொலிவாக இருக்கும் என்று கடந்து சென்று விடுவார்கள்.

ஆனால், தன்னுடைய முகம் பொலிவாக இருப்பதற்கு என்ன செய்கிறேன் என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார் ஹரிப்பிரியா.

அவர் கூறியதாவது, அந்த காலத்தில் இந்த விஷயத்தை கடவுளின் பெயரை சொல்லி மக்களை செய்ய சொன்னார்கள். எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் அதில் கடவுள் நம்பிக்கையை சேர்த்து செய்யும் பொழுது இன்னும் ஈடுபாட்டுடன் மக்கள் ஈடுபடுவார்கள். அதுதான் விரதம் இருப்பது.

அந்த காலத்தில்.. இன்னும் சொல்லப்போனால்.. 20 வருடங்களுக்கு முன்பு சென்றால் கூட வாரத்தில் ஒரு நாள் பெரும்பாலானோர் விரதம் இருப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

ஆனால், தற்பொழுது மாறிவிட்ட வாழ்க்கை சூழல், வேலைப்பழு போன்றவை இப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துவதை மழுங்கடித்து விட்டது என கூறலாம்.

ஆனால் வாரம் ஒரு முறை திட உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் வெறும் நீர் ஆகாரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இருந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.

குறைந்தபட்சம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திட உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் பழரசங்கள், தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட நச்சுக்கள் வெளியேறி உங்களுடைய உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

உங்களுடைய உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்து விட்டாலே உங்களுடைய சருமம் பொழிவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இதனை நீங்கள் கடவுளின் பெயரை சொல்லி செய்தால் உங்களுடைய உடலுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும் ஆரோக்கியமாக இருக்கும் என கூறியுள்ளார் ஹரிப்பிரியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version