குத்துன்னா.. இப்படி குத்தனும்.. சீரியல் நடிகை ஹரிப்பிரியா வெளியிட்ட வீடியோ..! மட்டையான ரசிகர்கள்..!

எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிப்பிரியா குத்துச்சண்டை பயிலக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் என்ன குத்து குத்துனா இப்படி குத்தணும் என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹரிப்பிரியாவிற்கு அதே சீரியலில் மகளாக நடித்து வரும் மோனிஷா குத்துச்சண்டை பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமான மோனிஷா தன்னுடைய பள்ளிக்காலம் முதலே தற்காப்பு கலையில் கை தேர்ந்தவராக இருந்து வருகிறார்.

கராத்தே, குத்துச்சண்டை, களரி, சிலம்பம், வாழ் சண்டை, குதிரை ஏற்ற ஆகியவற்றை தன்னுடைய பள்ளி காலத்திலிருந்து பயின்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

தனது சகோதரருடன் சேர்ந்து தற்காப்பு கலையில்  கின்னஸ் சாதனையும் படைத்திருக்கும் இவர் தற்போது தனக்கு அம்மாவாக சீரியலில் நடிக்கும் நடிகை ஹரிப்பிரியாவுக்கு குத்துச்சண்டை பயிற்சி கொடுத்திருக்கும் வீடியோ காட்சி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். தற்போது வரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version