ஹபீபி.. கம் டு துபாய்.. அரபு ராணி கெட்டப்பில் சுண்டி இழுக்கும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் துபாய் நாட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் சக்கை போடு போட்டு வரும் ஹரிப்பிரியா இசை ஹபீபி.. கம் டு துபாய் என சொல்லி துபாய்க்கு சென்று வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

எதிர்நீச்சல் ஹரிப்பிரியா…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தில் இருந்த இந்த சீரியலில் நடித்த ஒரு முக்கிய நடிகரின் இறப்புக்கு பின்பு சற்று ரேட்டிங்கில் தடுமாறியது.

இதனை அடுத்து தற்போது நேர்த்தியான முறையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் ஹரிப்பிரியா இசையின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெற்றி பெற்ற ஹரிப்பிரியா இசை ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆரம்ப நாட்களில் இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடித்திருக்கும் இவர் சமூக ஊடகங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அரபு ராணி அவதாரம்..

இந்நிலையில் விடுமுறையை கழிப்பதற்காக சமீபத்தில் இவர் துபாய் சென்றிருக்கிறார். துபாயில் பொழுதைப் போக்கி வரும் ஹரிப்ரியா தற்போது அலங்காரம் செய்யப்பட்ட பாரம்பரிய அரபு கவுனை அணிந்திருக்க கூடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்துவிட்டு அட இவர் என்ன அரபு ராணியா? என்ற கேள்வியை கேட்க வைக்க கூடிய அளவு அந்த உடையில் தத்துரூபமாக ஜொலிக்கிறார்.

மேலும் ஒரு புகைப்படத்தில் கழுகினை கையில் பிடித்த வண்ணம் அமர்ந்த நிலையில் போஸ் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக உள்ளது என்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது துபாயில் இவர் மிக சந்தோஷமாக மன மகிழ்ச்சியோடு பொழுதனை கழித்து வருவது தெளிவாக தெரிகிறது.

கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் நடிப்பதற்கு என்ட்ரி கொடுத்த ஹரிப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரின் மூலம் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பும் நடிகையாக மாறினார்.

அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்து இவர் எப்போது தங்கள் வீட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களின் முன்னிலையில் ஏற்படுத்தி விட்டார்.

எது எப்படி இருந்தாலும் இவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட ஹரிப்பிரியா தன் குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் போலவே தன் வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்டு ஹரிப்பிரியா இசை இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version