சீரியல் நடிகருடன் காதல், திருமணம், விவாகரத்து.. நிஜ வாழ்விலும் எதிர்நீச்சல் போடும் ஹரிப்பிரியா..!

பல ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிப்புத்துறைக்குள் வந்தவர் நடிகை ஹரிப்பிரியா. இப்போது சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நந்தினியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அடுத்து ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலிலும், சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலான ஓடிய பிரியமானவள் என்ற சீரியலில் இசை என்ற கேரக்டரிலும் ஹரிப்பிரியா நடித்திருந்தார்.

சன்டிவியில் ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியலிலும் ஹரிப்பிரியா நடித்திருந்தார்.

பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்த ஹரிப்பிரியா, அப்போது பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து, 2012ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமண வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த நிலையில் இருவரும் ஒரு ஆண்பிள்ளைக்கு பெற்றோரும் ஆயினர்.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துக்கொண்டு நிரந்தரமாக பிரிந்தனர்.

ஹரிப்பிரியா..

விக்னேஷ்குமார் – ஹரிப்பிரியா இருவரும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், அவர்கள் பிரிவுக்கு காரணம், சன்டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அசார்தான் என்று கூறப்பட்டது.

நிஜத்திலும் எதிர்நீச்சல்..

ஆனால் இதுபற்றி ஹரிப்பிரியா கூறிய போது, ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ, என் கணவனோ கிடையாது. பின்பு எப்படி அவர் என் ஆத்மார்த்தமான நபராக இருக்க முடியும்?

அந்த மனிதர் என் பாய் பிரண்ட் கிடையாது. காதல் கிடையாது. என் வாழ்க்கை துணையும் இல்லை. மகிழ்ச்சியாக பேசுவது என் பிறப்புரிமை. இதில் தவறு என்னுடையது இல்லை. அது பார்ப்பவர்களிடம் இருக்கிறது.

இதை நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது, என இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஹரிப்பிரியா.

சீரியல் நடிகருடன் காதல், திருமணம், விவாகரத்து என்று, சன் டிவி சீரியலில் மட்டுமல்ல, ஹரிப்பிரியாவின் வாழ்க்கை நிஜத்திலும் எதிர் நீச்சல் கதைதான் என்பதையே அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version