அச்சு பிசகாமல் ஜோதிகா போலவே இருக்கும் அவருடைய சகோதரி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

நடிகை ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது துறுதறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

அடுத்து வந்த பல படங்களில் ஜோதிகா நடிப்பில் தனித்துவம் காட்டினார். அந்த முட்டைக் கண் பார்வையில் காட்டிய பாவங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர். ஒரு கட்டத்தில் சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட ஜோதிகா, கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறார்.

சமீபத்தில் ஜோதிகா, மம்முட்டி ஜோடியாக நடித்த காதல் தி கோர் படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக, கவனத்தை ஈர்த்த படமாக அமைந்தது. இப்போதும் தனக்கு முக்கியத்துவம் உள்ள 3 படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நக்மா, ஜோதிகாவின் சகோதரி. நக்மாவும் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பிரபுதேவா, சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்றவர்களுடன் நடித்தார்.

நடிகை ஜோதிகாவின் மற்றொரு சகோதரி ரோஷினி. இவர் சிஷ்யா என்ற படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார். பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜோதிகா போலவே இருக்கிறார்.

அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ஜோதிகா போலவே இருக்கிறாரே, என ரசிகர்கள் பலரும் அசந்து போய் இருக்கின்றனர். இரட்டை சகோதரிகள் போல இருக்கிறார்களே என, அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version