இதை ரத்து பண்றேன்-ன்னு அறிக்கை விட்டா.. அஜித் ரசிகர்கள் ஓட்டு விஜய்க்கு தான்..! – பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சி ஒன்றை தொடங்கி அதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என்ற அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேச்சாக இருக்கிறது.

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு ரசிகர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருப்பதை பார்க்க முடியாது. அதேபோல பொதுமக்களும் இதற்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்றே தெரிகிறது.

குறிப்பாக 35 வயதுக்கு கீழ் உள்ள வாக்காளர்கள் நடிகர் விஜயின் அரசியல் வருகையை ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பாக பார்க்கிறார்கள் 35 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் இதனை ஒரு செய்தியாகவே கடக்க முயல்கிறார்கள் என்பதையும் பல்வேறு ஊடகங்களின் கருத்துக்கணிப்பின் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களின் ஆதரவை வாக்காக மாற்றுவாரா..? அவருடைய அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது…? என்பதெல்லாம் அவருடைய அரசியல் நடவடிக்கைகளைப் பொறுத்துதான் அமையப்போகிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜயின் அரசியல் நுழைவை கலாய்க்கும் விதமாக, கிண்டல் செய்யும் விதமாக, பகடி செய்யும் விதமாக பல்வேறு மீம்களை இணைய பக்கங்களில் பார்க்க முடிகிறது.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் என்றாலே ஒரு பனிப்போர் இருந்து கொண்டே இருக்கும். அதையும் தாண்டி, நடிகர் விஜய் அஜித் ரசிகர்களின் வாக்கை பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்று ஒரு மீமை இணையத்தில் பறக்க விட்டிருக்கின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் குபீர் சிரிப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். அது வேறு ஒன்றும் கிடையாது. நடிகர் விஜய் அஜித்தின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்கிறேன் என்று அறிவித்தால் அஜித் ரசிகர்கள் அனைவரும் விஜய்க்கு வாக்களித்து விடுவார்கள்.

அவர் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் அவருடைய பைக் மற்றும் காரில் உலகம் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவருடைய ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது விடுவேன் என்று விஜய் அறிக்கை விட்டால் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிப்பார் என்ற ஆசையில் நடிகர் விஜய்க்கு அஜித் ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என்று பங்கம் செய்திருக்கின்றனர்.

அந்த மீம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version