காதலனை பிரிந்த வலிமை ஹீரோயின்..! – காரணம் தெரிந்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

காதல் எப்போது வரும் எப்போது செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது. சட்டென்று காதலித்து விடக் கூடியவர்கள் அதே சமயத்தில் பட்டென்று விலகியும் விடுகிறார்கள். அந்த வகையில் வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷி தன் காதலை பிரேக்கப் செய்த விஷயத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மூன்று வருட காதல்..

பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காலா படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பெற்று விட்டார். இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கி இருந்தார்.

ரஜினிகாந்த் படத்தில் காதலியாக நடித்த இவர் வயதான பெண் தோற்றத்தை நேர்த்தியான முறையில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் அனைவரும் இவரை தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இதனை அடுத்து வளர்ந்த நடிகைகளுக்கும், வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் கிடைக்காத ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. அது எஸ் வினோத் இயக்கத்தில் வெளி வந்த வலிமை திரைப்படத்தில் இவர் அஜித்தோடு இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார்.

தற்போது இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் பாலிவுட் படங்களில் நடித்த வருகிறார். மேலும் இவர் நடிப்பில் டபுள் எக்ஸ்.எல் என்கிற ஹிந்தி திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்காக நம் சிம்பு ஒரு பாடலை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த டபுள் எக்ஸ்.எல் படத்தை முடாசர் அஜிஸ் என்பவருடன் இணைந்து தயாரித்திருக்கும் ஹுமா குரேஷி கடந்த மூன்று ஆண்டுகளாக இவரை காதலித்து வந்திருக்கிறார்.

ஒரே படத்தில் மோதல்..

உயிருக்கு உயிராய் உருகி உருகி காதலித்து வந்த இவர்கள் இருவரும் தற்போது பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

இதனை அடுத்து இவர்களது பிரிவுக்கு காரணம் என்ன என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ரசிகர்கள் அனைவரும் ஒரே ஒரு படத்துல ஒன்னு சேர்ந்து அப்படி என்னய்யா அவங்களுக்குள்ள ஏற்பட்டது எனக் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு காதலனுடன் சேர்ந்து தயாரித்த ஹுமா குரேஷியிடம் கணிசமான தொகையை கணக்கு காட்டாமல் கையாடல் செய்திருக்கிறார் அவருடைய காதலன் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் வாக்கவாதம் இருவருடைய காதலையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் இதுதான் காரணம் என ஹுமா குரேஷி மற்றும் அவருடைய காதலனும் உறுதிப்பட அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த மோதலால தான் இவர்கள் இருவரும் பிரிகிறார்களா? என பேசி வருகிறார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் காதலை முறித்துக் கொண்டாலும் தொடர்ந்து நட்பு ரீதியில் நட்போடு இருக்க உறுதி கொண்டிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். வரும் நவம்பர் மாதம் இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்த ஜோடிகள் இருவரும் பிரிந்தது இவர்களது ரசிகர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனி மேல் இவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இவரது ரசிகர்கள் ஹூமா குரேஷிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்

மேலும் இந்த பிரேக்கப் காரணத்தால் அவர் மனதளவில் சிரமங்களையும், கஷ்டங்களையும் சந்தித்து இருக்கலாம். எனவே அதை எல்லாம் விட்டுவிட்டு மீண்டும் திரைப்படங்களில் அதிக அளவு கவனத்தை செலுத்துவதின் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கலாம் என்ற அட்வைஸ் செய்யும் கொடுத்திருக்கிறார்கள்.

எனவே விரைவில் இவர் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்து பல புதிய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பலரும் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version