ராஜா ராணி சஞ்சீவ் யாருன்னு தெரியுமா..? – பலரும் அறியாத ரகசியம்..!

பலரும் சின்னத்திரையில் பிரபலமாகி, பிறகு வண்ணத்திரைக்கு செல்வார்கள். அதாவது டிவி சேனல்களில் வந்து பிரபலமாகி, சினிமாவில் நடிப்பார்கள். ஆனால் சஞ்சீவ் வாழ்க்கையில் அது நேர்மாறாக நடந்திருக்கிறது.

கோவையைச் சேர்ந்த சஞ்சீவ் பிறந்தது, வளர்ந்தது, ஸ்கூல், கல்லூரி படிப்பு எல்லாமே கோவையில்தான். ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். இன்ஜினியர். ஆனால் சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம்.

ஸ்கூலில் நடனப்போட்டிகளில் கலந்துக்கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த அவர் முதலில் கலைஞர் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஆடியிருக்கிறார்.

அதன்பிறகு அபூர்வா என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். அதில் மாணவராக வரும் இவருக்கு, ஓவியாதான் ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்த தமிழில் குளிர் 100 டிகிரி படத்தில் நடித்திருக்கிறார். 2009ல் இந்த படம் வெளியானது.

அடுத்து 2014ல் உயிருக்கு உயிராக என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 12 கிலோ தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். பிரபு உள்ளிட்டோர் நடித்தும் இந்த படம் ஓடவில்லை.

அடுத்து 2015ல் வேந்தர்டிவியில் சமையல் குக் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பிறகு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்திருக்கிறார். அந்த கேரக்டரில் நடித்த பிறகு சஞ்சீவ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, இப்போது படங்களில் நடிக்கவும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version