அந்த நேரத்தில் ஆண்கள் இதை போட்டா பிடிக்காது.. ஐஸ்வர்யா மேனன் ஓப்பன் டாக்..!

தமிழ் படம் 2, உளவு, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா மேனனின் குடும்பம், கேரளாவைச் சேர்ந்தது. ஆனால் ஐஸ்வர்யா மேனன் வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையை அடுத்துள்ள ஈரோட்டில்தான்.

காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வேழம் உள்ளிட்ட படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார்.

பருவ மாம்பழங்கள் என்ற மலையாள படத்திலும், கன்னடத்திலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

அழகி ஐஸ்வர்யா மேனன்..

தமிழ், மலையாளம், கன்னடனம் மூன்று மொழிகளில் நடித்தும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், ரசிகர்களில் பலரும் அழகி ஐஸ்வர்யா மேனன் என்றுதான் பலரும் ரசிக்கின்றனர்.
அழகாக இருப்பதை விட, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கும்போதுதான், அவர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெறுகின்றனர். அதிக பட வாய்ப்புகளையும் பெறுகின்றனர்.

அந்த வகையில் நிறைய பட வாய்ப்புகளை ஐஸ்வர்யா மேனன் பெற வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சீன் போடும் ஆண்களை..

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா மேனனிடம், எப்படியான ஆண்களை உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் கூறிய பதில், உண்மையாக இருக்க வேண்டும். பணிவானவராக இருக்க வேண்டும்.

ஆண்களுக்கு பொய் சொல்லும் பழக்கம் இருக்கக் கூடாது. இப்படியான ஆண்களை எனக்கு பிடிக்கும் என கூறிய அவர், அதே சமயம் சீன் போடக்கூடிய குறிப்பாக பெண்கள் பார்க்கும் நேரத்தில் சீன் போடக்கூடிய ஆண்களை எனக்கு பிடிக்காது எனக் கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

பெண்களிடம் பேசும் அந்த நேரத்தில் சீன் போடும் ஆண்களை எனக்கு பிடிக்காது, யதார்த்தமான ஆண்களையே பிடிக்கும் என வெளிப்படையாக இந்த நேர்காணலில் சொல்லி இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version