“சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்..!” – சிக்கலில் அயலான் ரிலீஸ்..!

யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடி விழுந்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பக்கூடிய நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே அஜித் மற்றும் விஜய்க்கு சவால் விடக்கூடிய வகையில் தனக்கு என்று ஒரு இடத்தை தற்போது பிடித்து வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு மேடையில் தளபதி விஜய், சிவகார்த்திகேயனை பற்றி பேசும் போது
அவர் புடிச்சுட்டாரு கிட்ஸ் மனதில் இடத்தை என்று மறைமுகமாக சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியை கூறியிருப்பார் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தயாரிப்பில் வெளி வந்த கனா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்தது. ஆரம்ப நாட்களில் சின்னத்திரையில் ஆங்கராக பணியாற்றிய இவர் வெள்ளித் துறையில் இத்தகைய சாதனைகளை புரிந்து இருக்கிறாரா? என்றால் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

விடாமுயற்சிக்கு முன்னுதாரணமாக அண்ணன் சிவகார்த்திகேயனை கூறலாம். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் அயலான் என்ற சயின்ஸ் பிக்சன் திரைப்படமானது வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் ஏற்கனவே பெற்ற கடன் காரணமாக இந்த படம் வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது மொத்த கடனில் சில கோடிகளை செலுத்தி விட்டு படத்தை ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன், உதயநிதியிடம் கொண்ட நெருக்கத்தால் சமீப காலமாக எந்த கடனையும் சரிவர கட்டவில்லை. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அயலான் படத்தை ரிலீஸ் செய்து விடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே முன் ஜாக்கிரதியாக விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதயநிதியை சந்தித்து சிவகார்த்திகேயனின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது. ஒருவேளை படத்தை வெளியீடு செய்து அதன் மூலம் வரும் வசூலை வைத்து கடனை அடைக்கச் சொல்வாரா? இல்லை வேறு ஏதேனும் ஒரு யுத்தியை உதயநிதி கூறுவாரா? என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

எனவே வரும் பொங்கலுக்கு அயலான் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்பது ஓரிரு தினங்களில் தெரிய வந்துவிடும். அதுவரை ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது கட்டாயம் ஆகிவிட்டது.

இதன் காரணத்தால் தான் இவர் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருவதோடு, இவருக்கு டைம் ரொம்ப மோசமாக இருப்பதால் தான் இது போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க வேண்டி உள்ளது என கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version