இதை போட்டா எப்படி தண்ணி வரும்..! கேள்வி எழுப்பி.. கொடுமை செய்த படக்குழு.. கதறும் இவானா..!

நடிகை இவானா தனக்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்த கொடுமை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, எனக்கு ரொமான்ஸ் காட்சிகளை விடவும் சென்டிமென்ட் காட்சிகள் எளிமையாக நடிக்க வரும்.. எமோஷனலான காட்சிகளில் நான் எளிமையாக நடித்து விடுவேன்.

ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. பொதுவாகவே என்னுடைய கண்கள் வரட்சியானது.. கிளிசரின் போட்டால் கூட கண்ணீர் வராது.. மூக்கில் இருந்து தண்ணீர் வரும் ஆனால் எனக்கு கண்ணீர் வருவது கடினமான ஒரு விஷயம்.

லவ் டுடே படத்தின் சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுவது போன்ற எமோஷனல் காட்சிகள் சில இடம்பெற்றிருக்கும். அந்த நேரத்தில் எனக்கு கிளிசரின் விட்டு கூட கண்ணீர் வரவில்லை.

பொதுவாக கிளிசரினை காது குடையும் பட்ஸ்ஸில் தொட்டு கண்ணில் வைப்பார்கள். ஆனால் எனக்கு நேரடியாக அந்த கிலிசரின் பாட்டிலில் இருந்து கண்ணில் ஊற்றினார்கள்.

அப்பொழுது பட குழுவினர் சிலர் கண்ணீர் வரவேண்டும் என்றால் கிளிசரின் விட வேண்டும் நீங்கள் ஐட்ராப் விடுகிறீர்களே என்று கேட்டார்கள்.

அப்போது நான் ஐ ட்ராப்ஸ் விடவில்லை கிளிசரீனை தான் இப்படி ஐ ட்ராப்ஸ் போல விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கதறினேன்.

அப்போதும் கூட எனக்கு கண்ணீர் இருந்து கண்ணீர் வரவில்லை எனவும் பிறகு தண்ணீரை கொண்டு தான் கண்ணீர் போல காட்சி படமாக்கினோம் எனவும் பதிவு செய்து இருக்கிறார் இவானா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version