“இந்த நடிகர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்..” நடிகர் ஜெயம் ரவி பதில்..!

மணிரத்னம் இயக்கத்தில், எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, கரிகாலச் சோழனாக சியான்விக்ரம், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், திரிஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர் ஒருவர், இந்த படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் சிம்பு நடித்தால், நான் நடிக்க மாட்டேன், விலகி விடுகிறேன் என்று ஜெயம் ரவி கூறியதாக சொல்லப்படுகிறதே, என கேள்வி எழுப்பினார்.

அதற்கு முந்திக்கொண்ட பதிலளித்த கார்த்தி, சோஷியல் மீடியாவில் வருவதை பார்த்து கேட்காதீர்கள். அதில் உயிரோடு இருப்பவர்கள் சிலரையே இறந்துவிட்டதாக கூறி விட்டனர். பல பேருக்கு அவர்களே 5 திருமணம் செய்து வைத்துவிட்டனர், என்றார்.

அந்த கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, ரூமுக்குள் இருந்து கேட்டது போல இப்படி சொல்கின்றனர். நான் சொன்னால் உடனே மணிரத்னம் கேட்டுவிடுவாரா, அப்படி கேட்கக் கூடிய ஆளா அவர். மணிரத்னத்திடம் இப்படி போய் நான் முதலில் பேச முடியுமா.

ஏதோ எனக்கே ஒரு ரோல் கொடுத்திருக்கார். அதை நான் பண்ண போறேன். அவனை போடாதே, இவனை போடாதே என்று சொல்ல முடியுமா. இதுபற்றி கேள்விபட்டு சிம்புவே எனக்கு போன் செய்தார். மச்சி, நான் அந்த படத்துல நடிச்சா, நீதான் முதல் ஆளா சந்தோஷப்படுவே. யாரோ தப்பா சொல்லி இருக்காங்க, இதையெல்லாம் கண்டுக்காத என்று சிம்புவே எனக்கு சொன்னார், என்று பதில் தந்திருக்கிறார் ஜெயம் ரவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version