நீச்சல் உடையில் திணறடிக்கும் நடிகை ஜெயஸ்ரீ..! வைரலாகும் புகைப்படங்கள்..!

1980-களில் தென்றலே என்னைத் தொடு என்ற திரைப்படத்தில் மைக் மோகன் இணைந்து நடித்த நடிகை ஜெயஸ்ரீ உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். இந்தப் படத்தில் இவரோடு சேர்ந்து தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வெண்ணிறாடை மூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

அந்தப் படத்தில் இவர் நடிப்பை மட்டுமல்லாமல் கவர்ச்சியும் அதிக அளவு காட்டக் கூடிய வகையில் பிகினி உடை அணிந்து இளைஞர்களை கவர்ந்து பல படங்களை தொடர்ந்து பெற்றார்.

இவர் சினிமாவிற்கு புதிதல்ல. இவரது பாட்டி பழம் பெரும் நடிகை மற்றும் பாடகியான ஜெயலட்சுமியின் பேத்தி என்பதால் திரைத்துறை வாய்ப்பு எளிதில் இவருக்கு கிடைத்தது. மேலும் இவரது தாத்தாக்கள் எஸ் பாலச்சந்தர் மற்றும் எஸ் ராஜம் திரை உலகில் இசை அமைப்பாளர்களாக இருந்தவர்கள்.

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்த பெரும்பாலான தமிழ் படங்கள் 1985 முதல் 1997 வரை வெளி வந்துள்ளது. தமிழில் இவர் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

மேலும் ஜெயஸ்ரீ 1988 திருமணம் செய்து கொள்ளும் வரை பிஸியாகவே நடித்தார். இதனை அடுத்து 1997-ல் கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் கார்த்திக் நடித்த பிஸ்தா படத்திலும், 2014ல் காதல் 2 கல்யாணம் மற்றும் 2016 இல் மணல் கயிறு 2 போன்ற படங்களில் தலையைக் காட்டி சென்றார்.

தற்போது அமெரிக்காவில் இரு குழந்தைகளோடு செட்டில் ஆகி இருக்கும் இவர் அன்று எடுத்த பிகினி உடை போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் நீச்சல் உடையில் திணறடிக்கும் நடிகையாய் ஜெயஸ்ரீ திகழ்ந்ததை எண்ணி, தற்போது நடிகைகளை விட ஒரு படி மேலே அன்று கவர்ச்சியில் கலக்கி இருக்கிறார் என பேசி வருகிறார்கள். தீயாய் பரவி வரும் புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.

அப்போது தான் உண்மையில் அவர் எப்படி அன்றே கவர்ச்சி பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் எளிதில் புரியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version