நான் ஷூட்டிங் சென்ற பிறகு.. வீட்டில் என் மாமனார் செய்த வேலை.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜோதிகா. இவர் வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இவரது செகண்ட் இன்னிங்ஸ் 36 வயதிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தார். இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வர ஆரம்பித்தது. ஆனால் குறிப்பிட்ட கேரக்டர் ரோல்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

எனினும் இவரது நடிப்புக்கு பெரும் தடையாக இவரது மாமனார் இருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்து உள்ளது. இவர் மாமனாரும் மிகப் பிரபலமான திரைப்பட நடிகராக இருந்து தனது மருமகளுக்கு நடிக்க தடை விதிப்பது முறையாகுமா? என்று பலரும் பல விதத்தில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்கிடையில் நடிகர் சிவகுமார் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பமாக மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக ஜோ மற்றும் சூர்யா மும்பைக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டதாக வதந்திகள் வெளி வந்தது.

இதைப் பற்றி அண்மை பேட்டி ஒன்றில் ஜோதிகாவிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதற்கு ஜோதிகா அளித்த பதிலை கேட்டால் நீங்கள் மெர்சலாகி விடுவீர்கள்.

இந்த பதிலில் ஜோதிகா கூறியது, தான் ஷூட்டிங்குக்கு செல்லும் சமயத்தில் வீட்டில் தனக்கு தனது மாமனார் மிகவும் சப்போர்ட்டாக இருந்ததாகவும், எப்போது ஷூட்டிங் போனாலும் குழந்தைகளை மறந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியிருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் கோவிட் சமயத்தில் மும்பையில் இருந்த தனது பெற்றோர்கள் பெரிதும் துன்பம் அடைந்த காரணத்தால் அங்கு அடிக்கடி தன்னால் சென்று பார்க்க முடியவில்லை. இந்த விஷயத்தை சூர்யாவிடம் கூறியதை அடுத்து மும்பைக்கு குடியேற அவர் சம்மதித்தார். எனவே குடும்பத்திற்குள் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்.

எனவே வீணாக கிளம்பும் வதந்திகளை நம்பி ஜோவால் குடும்பம் பிரிந்து விட்டது என்று இனி யாரும் கூற வேண்டாம். மேலும் ஜோதிகாவின் இந்த பதிலானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழகம் பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version