ஹீரோயின் ஆகும் வனிதா மகள் ஜோவிகா..! – ஹீரோ யாருன்னு தெரியுமா..?

திரை உலகை பொருத்த வரை வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரைப்படங்களில் நடித்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அவரது மகள் ஜோதிகாவும் இவரை அடுத்து திரை உலகில் களம் இறங்க இருக்கிறார்.

வனிதா விஜயகுமார்..

தமிழ் திரை உலகில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றத்தின் மூலம் இவருக்கு பெருவாரியான ரசிகர்கள் கிடைத்தார்கள். மேலும் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வந்தார்.

மேலும் இவர் பிக் பாஸ் சீசனை ரிவ்யூ செய்து யூடியூப் சேனல்களில் வெளியீடு செய்வதை பலரும் விரும்பி பார்த்தார்கள். இதற்கு என்று தனியாக ஒரு ரசிகர் வட்டாரமே இருந்தது என கூறலாம்.

இவரைத் தொடர்ந்து இவரது மகளும் பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்டார். தன் அம்மாவைப் போலவே துடிப்புடன் காணப்பட்ட இவர் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜோவிகா விஜயகுமார்..

ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்று தொடரை வெல்ல முடியாமல் வெளியேறினார். இருந்தாலும் இவர் தன் அம்மா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற கூற்று படி பிக் பாஸ் வீட்டில் பல்வேறு வகையான சர்ச்சைகள் கிளம்ப காரணமாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் தன்னைவிட வயதில் மூத்த நடிகை ஆன விசித்ராவிடம் ஏற்பட்ட விவாதத்தில் ஒருமையில் பேசிய இவர் தன் பள்ளி படிப்பை தொடர வேண்டும் என்று சொன்னதற்காக இப்படி எல்லாம் பேசுவார்களா? என்ற சர்ச்சையை கிளப்பியதோடு பெரியவர்களை மதிக்காமல் தலைகனத்தோடு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டிற்கும் உள்ளானார்.

இந்நிலையில் விரைவில் 18 வயது நிரம்பப் போகக் கூடிய ஜோவிகா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

இதனை அடுத்து வனிதா விஜயகுமாரும் தனது மகள் ஹீரோயினியாக நடிக்க பல படங்களில் கதைகளை கேட்டு வருவதாகவும் விரைவில் நல்ல கதையம்சம் உள்ள படம் வாய்க்கும் போது அதில் தன் மகள் கட்டாயம் ஹீரோயினியாக நடிப்பார் என்றும் அந்த சமயத்தில் ஹீரோ யார் என்று தான் தெரிவிப்பதாக அண்மை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கு திரைப்படத்தில் கிடைக்காத பெயரையும், புகழையும் மகள் ஜோவிகா அடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் அனைவரும் இது பற்றிய பேசை தங்கள் நண்பர்களோடு பேசி வருகிறார்கள். ஜோவிகா நடித்து விட்டால் மூன்று தலைமுறையாக நடிப்புத் துறையில் இருக்கக்கூடிய குடும்பம் என்ற நிலை விரைவில் இவர்களுக்கு கிடைக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version