ஆண்ட்டி என்று கூறிய தொகுப்பாளர்.. ஜோதிகா செய்ததை பாருங்க.. என்ன நடந்தது..!

வாலி படத்தில் நடித்த ஜோதிகாவிற்கும் மம்முட்டியோடு முதன் முறையாக இணைந்து  காதல் தி கோர் படத்தில் நடித்த ஜோதிகாவிற்கும் இடையே எத்தனை வித்தியாசங்கள் இருக்கிறது என்றால் ரசிகர்கள் பட்டென்று கூறிவிடுவார்கள்.

ஆனாலும் அதை ஒத்துக் கொள்ள முடியாத ஜோதிகா தற்போது தொகுப்பாளர் ஒருவரை லேசாக மிரட்டுவது போல் அளித்து இருக்கும் பதில் பலரையும் வியப்பில் தள்ளி உள்ளது.

ஏற்கனவே ஜோ, சூர்யாவை மும்பைக்கு அழைத்து சென்றது முதல் கிரிக்கெட் அணியை விலைக்கி வாங்கியது வரை, வீட்டில் பெரியவருக்கும் இவருக்கும் ஏகப்பட்ட லடாய் ஆன நிலையில் அண்மை பேட்டியில் ஜோதிகா இவ்வாறு நடந்து கொண்டது மிகப்பெரிய ரியாக்ஷனை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தன் தாயாரை கவனித்துக் கொள்ளத் தான் மும்பை சென்று இருப்பதாகவும், அங்கு தேவையான கல்வி பிள்ளைகளுக்கு சீரான முறையில் கிடைப்பதால் இருவரும் அங்கு செட்டிலாக இருப்பதாக கூறி இருக்கும் ஜோ அண்மை பேட்டியில் கலந்து கொண்டு பதில் அளித்து இருக்கிறார்.

அதில் ஜோதிகாவிடம் சூர்யா இளமையாக இருந்தபோதில் அவரை பல இளம் பெண்கள் காதலித்தார்கள். ஏன் இப்போதும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அவரை ஆரம்ப காலத்தில் காதலித்த பெண்களெல்லாம் ஆன்ட்டி ஆகி விட்டார்கள்.

இருந்தாலும் இன்னும் அதே இளமையில் ஆள் பார்க்க எவர்கிரீன் தோற்றத்தில் சூர்யா இருக்கிறார் என்று தொகுப்பாளர் கூறியதை அடுத்து சற்று கோபப்பட்ட ஜோதிகா அவர் இளமையாக இருந்த போது அவரை காதலித்த பெண்கள் தற்போது ஆன்டி ஆகிவிட்டார் என்று என்னையும் சேர்த்து தானே கூறுகிறீர்கள், என சற்று செல்லமாக மிரட்டக்கூடிய வகையில் தொகுப்பாளரை லாக் செய்தார்.

இதைக் கேட்டு சற்றும் பதறாத அந்த தொகுப்பாளர் நான் பொதுவாக தான் சொன்னேன் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக நழுவியதை அடுத்து இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த பேட்டியை தொடர்ந்து பார்த்து வருவதோடு ஜோதிகாவுக்கு மட்டும் என்ன அவரும் எவர்கிரீன் நடிகை தான் என்று ஆதரவாக அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version