வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்..! கடைசியா கெஸ்ட் ரோல் பண்ணேன்..! பிரபலம் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், கமல், ரஜினி, சூர்யா என பல நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு திரை உலகில் இருந்து பிரேக் எடுத்த இவர் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து பெண்களை பெருமையாய் பேசுகின்ற திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரினை பெற்றார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த காற்றின் மொழி, ராட்சசி போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து மலையாளத்தில் முதல் முறையாக நடிகர் மம்முட்டியோடு ஜோடி சேர்ந்து காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் இவர் அண்மையில் ஒரு பேட்டியில் தனது திரை அனுபவங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் இவர் வாலி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார்.

ஆனால் உண்மையில் வாலி படத்தில் சிம்ரன் நடித்த கேரக்டரை இவர்தான் நடிக்க வேண்டி இருந்ததாம்.எஸ் ஜே சூர்யா இந்த கேரக்டருக்கு நடிக்க அழைத்த போது ஓகே சொல்லிய நிலையில், அதே நேரத்தில் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் நடிக்க சென்ற காரணத்தால் தான் சிம்ரன் அந்த கேரக்டரில் நடித்ததாக தெரிவித்தார்.

எனினும் எஸ் ஜே சூர்யா ஜோதிகாவை விடாமல் துரத்தியதின் காரணமாக மறுபடியும் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் அந்த படத்தில் நடித்ததாக கூறியிருக்கிறார். மேலும் அந்த படத்தை மிஸ் பண்ணியது தன்னுடைய தவறு என்பதை நினைத்து பல நாட்கள் வருந்தியதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி ஜோதிகா, சிம்ரன் ரோலில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர்களை கற்பனை செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version