முற்றிய ஜோதிகா சிவகுமார் மோதல்..! சிவகுமாரின் ஜாதி பாசம்..! Revenge எடுத்த ஜோதிகா..!

நடிகர் சிவகுமார் ஜோதிகா இடையே மோதல் முற்றி ஜோதிகா பழிவாங்கும் அளவுக்கு சென்ற சம்பவம் மற்றும் நடிகர் சிவகுமாரின் ஜாதி பாசம் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

பலரும் அறிந்திடாத தகவல்களை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள் இணைய பக்கங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சிவக்குமார் ஜோதிகா இடையே நடந்த மோதல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.. நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்கிறார்கள் என்று இருவருமே தங்களுடைய வீட்டில் சொல்லிக் கொள்ளவில்லை. இருவரும் கால் போன போக்கில் காதலித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

வீட்டில் சொல்லக்கூடிய மனநிலையில் இருவருமே இல்லை. ஆனால், ஊடகங்கள் வாயிலாக கிசுகிசுவாக கிளம்பிய இந்த தகவல்கள் உண்மை என்று தெரிய வர நடிகர் சிவகுமார் கொந்தளித்து இருக்கிறார்.

நடிகர் சூர்யாவிடம் கடுமையாக சண்டை போட்டு இருக்கிறார். ஆனால், நடிகர் சூர்யா ஜோதிகாவை தான் திருமணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நின்று இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக நடிகை ஜோதிகா தன்னை பேட்டி எடுக்க வரக்கூடிய நான் சூர்யாவை காதலிப்பது உண்மைதான் ஏன் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்..?

இந்த கேள்வியை நீங்கள் சூர்யாவின் தந்தையிடம் தான் கேட்க வேண்டும் என்று இலை மறை காய் மறையாக கூற அந்த பத்திரிகையாளர்கள் நேரடியாக சிவக்குமாரிடமே சென்று இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் நீங்கள் காதலுக்கு எதிராக இருக்கிறீர்கள்…? என்ன காரணத்தினால் ஜோதிகாவை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வியில் துளைத்து இருக்கிறார்கள்.

ஆனால், இந்த கேள்விகள் எதற்குமே சிவகுமார் சரியான பதில் கொடுத்தது கிடையாது. சூரியா ஜோதிகா காதல் கிசுகிசுவுடன் சிவகுமார் பதில் கொடுக்க மறுத்துவிட்டார் என்ற செய்தியும் ஊடகங்களில் வெளியாகின தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர் சிவகுமாரை ஊடகங்கள் மூலமாக ரிவெஞ் எடுத்திருக்கிறார் ஜோதிகா என்றெல்லாம் தகவல்கள் பரவின.

ஒரு வழியாக நடிகர் சிவகுமார் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு திருமணம் செய்து கொள்ள அனுமதித்து விட்டார். இந்த திருமணத்திற்கு யாரெல்லாம் ஜோதிகா சூர்யா காதலுக்கு நான் எதிராக இருக்கிறேன் என்று கூறினார்களோ அத்தனை பத்திரிகையாளர்களையும் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்து அளித்திருக்கிறார் சிவகுமார்.

திருமணத்தன்று பத்திரிகையாளர்களிடம் சென்று உங்களுடைய ஆசை நிறைவேற்றி விட்டதா..? ஜோதிகாவிற்கு என்னுடைய மகனை திருமணம் செய்து கொடுத்து விட்டேன்.. இப்போது சந்தோஷமா.. என்று கடுப்பான முகத்துடன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதன் பிறகு திருமணம் நிகழ்ச்சி என்பதால் அதிகப்படியாக உணர்ச்சி வசப்படாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கிறார் நடிகர் சிவகுமார். எந்த அளவுக்கு தன்மையை தன்னுடைய ஜாதி மீது பாசம் வைத்திருக்கிறார் என்று அவருடைய பேட்டி ஒன்றின் மூலமாக நாம் கண்டுகொள்ள முடியும்.

மேடை ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் சிவகுமாரை ஒரு விஷயத்தை கூறினார். அது என்னவென்றால்.. நானும் என் மகன் கார்த்தியும் ஒருமுறை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையாரை சந்திக்க சென்று இருந்தோம்.

அப்பொழுது பல விஷயங்களை பேசினோம். குறிப்பாக என் மகன் கார்த்தியிடம் ஜெயலலிதா அவர்கள் கூறியது.. உன் அண்ணன் தான் அப்பாவுக்கு பிடிக்காமல் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. நீயாவது உன் அம்மா அப்பா சந்தோஷப்படும்படி உங்கள் ஜாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள் என்று கூறினார்.

ஒரு முதலமைச்சர் என்னுடைய குடும்பத்தின் மீது எந்த அளவுக்கு பற்று வைத்திருந்தால் என்னுடைய மகனுக்கு இப்படி ஒரு அறிவுரை கூறியிருப்பார் என தன்னுடைய ஜாதி பாசத்தை மேடையிலேயே வெளிப்படுத்தினார் சிவகுமார்.

ஆனால் நடிகர் கார்த்தி நடிகை தமன்னாவை காதலிக்கிறார் என்ற தகவல்கள் வைரலான போது முதல் ஆளாக முண்டி அடித்துக்கொண்டு தன்னுடைய சாதியில் ஒரு பெண்ணை பார்த்து கார்த்திக்கு திருமணம் செய்து வைத்தார் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக நடிகர் சூர்யா வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்திற்காக தங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாமல் தவித்து இருக்கிறார் சிவக்குமார்.

ஏனென்றால் அங்கு இருக்கக்கூடிய பங்காளிகள் என்ன கேள்வி எழுப்புவார்கள். என்று தெரியும். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது..? என தெரியாமல் தன்னுடைய குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்து இருக்கிறார் சிவகுமார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

ஒரு வழியாக நடிகர் கார்த்தியை அதே சமுதாயத்தில் இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்ததன் மூலம் தன்னுடைய பங்காளிகளின் கோபத்தை தணித்தார் அதன் பிறகு தான் சிவகுமார் தங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு செல்வதும் வருவதுமாக இருந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் பொதுவெளியில் வெளியாகி இருக்கின்றன.

இது எல்லாம் கூறிய இயக்குனர் பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு எவ்வளவு சாதி பாசத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டு இவர்கள்தான் ஜெய் பீம் என்ற சாதிக்கு எதிரான படத்தை எடுக்கிறார்கள் என உச் கொட்டுகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version