வெறித்தனம்.. வயசு வெறும் நம்பர் தாங்க.. ஜோதிகாவின் வீடியோ..! குவியும் லைக்குகள்..!

இயக்குநர் வசந்த் தனது பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகப்படுத்திய நாயகி, நடிகை நக்மாவின் தங்கை, நடிகர் சூர்யாவின் மனைவி, நடிகர் சிவக்குமாரின் மருமகள் என்ற பல அடையாளங்கள் ஜோதிகாவுக்கு உள்ளது.

நடிகை ஜோதிகா..

ஆனால் இதை எல்லாம் கடந்து நடிகை ஜோதிகா என்றொரு தனித்துவமான பெயரை பல படங்களில் தனது நடிப்புத்திறமையால் ஜோதிகா நிரூபித்து இருக்கிறார்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பேரழகன், குஷி, சந்திரமுகி, தெனாலி, திருமலை, மொழி, 36 வயதினிலே என பல படங்களை ஜோதிகாவின் சிறப்பான நடிப்புக்கு உதாரணமாக சொல்ல முடியும்.

சமீபத்தில், மலையாள நடிகர் மம்முட்டியுடன் காதல் தி கோர் படத்தில் நடித்து ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றார் ஜோதிகா.
இப்போது கணவர் சூர்யா மற்றும் தனது பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறிய நிலையில் ஜோதிகா, வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

ஜிம்மில் குடித்தனம்..

வயது 40 களை கடந்த நிலையிலும், ஜோதிகா இன்னும் நல்ல உடல் தோற்றத்தில், அழகான வடிவத்தில் காணப்படுகிறார். இப்போதும் கல்லூரி மாணவியாக நடிக்கும் அளவுக்கு அவரிடம் இளமையான தோற்றமும், உடல்வாகும் காணப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம், அவர் பல நேரங்களில் ஜிம்மில் குடித்தனம் செய்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த அவரது வீடியோ ஒன்றில், தலைகீழாக நின்றபடி தரையில் அடித்து பந்து விளையாடுவது, சுவரில் கால்களை பதித்தபடி படிக்கட்டுகளில் தலைகீழாக இறங்குவது என அட்ராசிட்டி செய்திருக்கிறார்.

வெறித்தனமாக அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதை வீடியோவில் பார்க்கும் ரசிகர்கள், வயது வெறும் நம்பர்தாங்க என்றபடி லைக் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version