என்னது பொண்ணா.. ரவுண்ட் கட்டிய நான்கு போலீஸ்.. ரகசியம் உடைத்த காவ்யா அறிவுமணி..!

தமிழ் தொலைக்காட்சிகளில் களை கட்டிய காவ்யா அறிவுமணி 2019 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

காவ்யா அறிவுமணி..

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் இவர் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்க ஆரம்பித்தார்.

ஏற்கனவே சின்னத்திரையில் நடிக்கின்ற நட்சத்திரங்கள் பலரும் வெள்ளி திரையில் ஜொலிக்கின்ற வேளையில் இவருக்கும் பெரிய திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் ஆக்ஷன் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த மிரள் என்ற திரைப்படத்தில் 2022 ஆம் ஆண்டு நடிகர் பரத்தோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து அதிகளவு திரைப்பட வாய்ப்புகளோ, சின்னத்திரை வாய்ப்புகளோ, கிடைக்காத காரணத்தால் சமூக வலைதளங்களில் படுபிசியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் மற்ற நடிகைகளிலிருந்து வேறுபட்டு இருக்கும்.

ரவுண்டு கட்டிய போலீஸ்..

மேலும் இவர் எப்போது புகைப்படங்களை இணையங்களில் வெளியிடுவார் என்று ஒரு ரசிகர் படையை காத்திருக்கும். அவ்வாறு அவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவும்.

அண்மையில் இவர் தனக்கு நடந்த விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுவும் இவரைச் சுற்றி ரவுண்டு கட்டிய நான்கு போலீஸ் பற்றிய ரகசியத்தை தற்போது இணையத்தில் உடைத்திருக்கிறார் காவியா அறிவுமணி.

அட.. அது எப்படிப்பட்ட விஷயம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அந்த விஷயமானது என்னவென்றால் பிரபல சீரியல் நடிகையான காவ்யா அறிவுமணி ஒரு முறை காரில் வேகமாக சென்று கொண்டிருந்த போது போலீசார் காரை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் என்னுடைய கார் கண்ணாடியை இறக்கி விட.. என்னை பார்த்து பெண் என்று தெரிந்த பிறகு சுற்றி இருந்த போலீசார் அனைவருமே என்னது பெண்ணா? பெண்ணா? என்று கூறினார்கள்.

அத்தோடு என்னிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற ரீதியில் கேள்வியை எழுப்பிய போது நான் நடிகையாக இருக்கிறேன் என்று கூறினேன். அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரி என்னை எங்கோ பார்த்தது மாதிரி உள்ளது என்று கூற நான் சீரியலில் நடித்த விபரத்தை கூறிவிட்டேன்.

இந்தச் சூழ்நிலையில் அவர் இனிமேல் சாலையில் மெதுவாக காரை ஓட்டிச் செல்லுங்கள் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டார்கள். அன்று முதல் காரை வேகமாக இயக்குவது கிடையாது என்று நடிகை காவ்யா அறிவுமணி தன்னை ரவுண்டு கட்டிய போலீசாரின் ரகசியத்தை இணையத்தில் போட்டு உடைத்து விட்டார்.

தற்போது இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

யாராக இருந்தாலும் சாலையில் செல்லும் போது பாதுகாப்பை முன்னிட்டு கவனமாக காரை இயக்குவது அவசியம் என்பதை உணர்ந்து கொண்டால் காவல்துறை அதிகாரிகளுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும். மேலும் சாலை விதிகளை மதித்து நடப்பது மிகவும் முக்கியம் இதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version