முன்னணி நடிகருக்கு ஹீரோயின் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..! எப்படி தெரியுமா..?

தற்போது தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு பஞ்சமில்லை அந்த அளவு டிஆர்பி ரேட்டுக்கு போட்டி போட்டுக் கொண்டு பல வகையான சீரியல்களை சன் டிவி, விஜய் டிவி,ஜீ டிவி என அனைத்து டிவி சேனல்களும் வாரி வழங்கி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து தற்போது வெள்ளித்திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை இந்த நடிகை பெற்றிருக்கிறார் என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே விஜய் டிவியில் சீரியல்களில் நடித்த வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் போன்றவர்கள் எல்லாம் சினிமாவில் தற்போது ஹீரோயினியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மருமகளுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் மருமகள் முல்லையாக சிறப்பான கேரக்டர் ரோல் செய்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட அந்த நடிகை தான் சினிமாவில் இனி ஹீரோயினியாக ஜொலிக்க போகிறார்.

ஏற்கனவே இந்த சீரியலில் முழுமையாக வாழ்ந்த விஜே சித்ரா இறந்ததை அடுத்து, இந்த கேரக்டர் ரோலை அறிவுமணி செய்து வருகிறார்.

இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததின் காரணத்தால் சீரியல் இருந்து விலகினார்.

இதனை அடுத்து சிறுசிறு வேடங்களில் வெள்ளித் திரையில் நடிக்க ஆரம்பித்த இவர், மிரள் என்ற படத்தில் நடித்தார். இதில் இவருடன் பரத், வாணி போஜன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், தான் தற்போது காவியா முன்னணி ஹீரோ நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்றும் அந்த படம் குறித்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பார்க்கப்பட்டு வருவதால் இவர் மேலும் பல வெள்ளித்திரை வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகையாக வர வேண்டும் என அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த பட வாய்ப்பு கிடைப்பதற்கு இவர் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கிளாமரை காட்டியதுதான் என்று ஒரு சாரார் தெரிவித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version