தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரும் தொழிலதிபருமான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடித்த கையோடு ஒரு ஆண் குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தமிழில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் 3 முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பிரபல தமிழ் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் படத்தில் இருந்து திடீரென வெளியேறினார் காஜல் அகர்வால்.
இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது.. உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிப்பதற்காக நடிகை காஜல் அகர்வாலுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதற்காக அட்வான்ஸ் கூட வாங்கி இருக்கிறார் காஜல் அகர்வால்.
ஆனால், அந்த நேரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்காக காஜல் அகர்வாலுக்கு அழைப்பு வந்திருக்கிறது.
எனவே சிரஞ்சீவி படம் தான் தற்போது எனக்கு முக்கியம் என்று வாங்கிய அட்வான்ஸ் திருப்பி கொடுத்துவிட்டு சிரஞ்சீவியின் ஆச்சாரியா படத்தில் நடிக்க சென்று விட்டாராம் காஜல் அகர்வால்.
அட்வான்ஸ் வாங்கி இருந்தாலும் கூட உதயநிதி படத்திற்காக எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட வில்லை காஜல் அகர்வால் என்பதால் எளிமையாக இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் காஜல் அகர்வால்.
இதனால் காஜல் அகர்வால் மீது சட்டபூர்வமாக என்ன நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் பட குழு.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு உதயநிதி நடிப்பில் உருவான நண்பேண்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் காஜல் அகர்வால். ஆனால், திடீரென கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து விலகி விட அவருக்கு பதிலாக நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.