விஜய் நடித்த இந்த படத்தை என் மகனுக்கு காட்டனும்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்தவர். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இரண்டுமுறை சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர்.

சென்னை 28 படத்தில், சில காட்சிகளில் மட்டுமே காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதன்பிறகு நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல், கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் நடித்த படங்களில் அவரது துருதுருப்பான நடிப்பு பல படங்களில் நன்றாக பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக தெலுங்கில் அவர் நடித்து தமிழில் வெளியான ராம்சரண் கதாநாயகனாக நடித்த மாவீரன் படத்தில், காஜல் அகர்வால் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

அதே போல் துப்பாக்கி படத்திலும், காஜல் அகர்வால் நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. விஜயின் காதலை ஏற்க மறுத்து, பின்பு அவருடன் காதலிக்கும் காட்சிகள் ரசிக்க வைத்தது.

திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட காஜல் அகர்வால், அடிக்கடி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்வது வழக்கம். அவை பலமுறை வைரலானது.

இப்போது இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் பல முக்கிய படங்களில், முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.

காஜல் அகர்வால், மும்பையை சேர்ந்தவர். இந்தி படங்களில் நிறைய நடித்திருக்கிறார். அவரது தங்கை நிஷா அகர்வாலும் ஒரு நடிகை. அவரும் பல இந்தி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஷா அகர்வால் தமிழ், தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.

விஜய் படம் காட்டணும்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை காஜல் அகர்வால், என் பையனுக்கு எட்டு வயது ஆன பிறகு, விஜய் நடித்த துப்பாக்கி படத்தை போட்டு காட்டுவேன், என்று கூறியிருக்கிறார்.

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.

என்றாலும், விஜய் நடித்த துப்பாக்கி படத்தை என் மகனுக்கு காட்டனும் என்று காஜல் அகர்வால் ஓப்பனாக கூறியிருப்பது, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version