எனக்கே வாழ்க்கை துணையாக இந்த நடிகை வருவார் என்று நினைக்கல – கூச்சமின்றி கூறிய கமல்..!

காதலுக்கு கண் இல்லை என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த காதலை வெவ்வேறு வடிவங்களாக எடுத்துக்கொண்டு வாழ்ந்த நடிகராக காதல் மன்னன் உலகநாயகன் கமல் விளங்குகிறார்.

திரை உலகில் முதல் முதலில் கௌதமியை பார்க்கும் போது அவர் மிகவும் ஸ்மார்ட் ஆன கிளாமரான பெண் என்று தான் நான் நினைத்தேன் என்று அண்மையில் பேசிய வீடியோ ஒன்றில் தனது கருத்தை பதிவு செய்ததை அடுத்து அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

திரை உலகில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் கமலஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்த வருகிறார். இந்த படம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வர உள்ளது. மேலும் இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவி இணைந்து தயாரித்து வழங்க இருக்கிறார்கள்.

ஏற்கனவே கமலஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளி வந்தது. அதனை அடுத்து 30 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் கமலஹாசன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே தனது இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் கௌதமியுடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்திருக்கிறார்.

இதனை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கமலஹாசனை விட்டு பிரிவதாக கௌதமி அறிவித்திருந்தார். இந்நிலையில் கௌதமி குறித்து கமலஹாசன் பேசியிருக்கும் பேச்சானது காதலில் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. கௌதமி எனக்கு துணைவியாக வருவார் என்று நான் சற்றும் நினைத்ததில்லை.

மேலும் கௌதமியோடு பழகும் போது அவரது சிந்தனை வடிவம் எனை கவர்ந்தது. அதை நான் பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு பிறகு உறவாக மாறி விட்டது என்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version