அடேங்கப்பா..! – MP தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் நிற்கும் தொகுதி..! – TV-யை எல்லாம் ஒடச்சீங்களே ஆண்டவரே..!

2024-ம் ஆண்டுக்காக நாடாளுமன்ற தேர்தலின் காய்ச்சல் நாளுக்கு நாள் எகிறி கொண்டிருகின்றது. பெரிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களுடைய பணிகளை துரிதமாக முடுக்கி விட்டுள்ளன.

இந்நிலையில்,நடிகர் கமலஹாசன் நிர்வகித்து வரும் மக்கள் நீதி மையம் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தை காண இருக்கிறது என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் அன்று நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார்.

அதில், தான் எடுத்துக் கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து காட்டியவர் அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் ஆகவும் சிறப்பாக செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். என பதிவேற்றிருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் எம்பி தேர்தலில் நின்று எப்படியாவது எம்பி ஆகி விட வேண்டும் என்ற முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை காக்கா பிடிக்கிறார் என்று இணைய பக்கங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

குறிப்பாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், ஸ்டாலினை விமர்சிக்க வேண்டும் என்றால் கருணாநிதி என்று சொன்னாலே போதுமானது.. என கூறிய கமலஹாசன் இப்போது தலைகீழாக மாறி உதயநிதிக்கு வாழ்த்துக்கள் அவருக்கு பாராட்டு பத்திரங்களை வாசிப்பதும் என இருப்பது தான் சரியாகப்படவில்லை. விமர்சிக்க செய்கிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் விமர்சகரும் மற்றும் பத்திரிக்கையாளருமான மருத்துவர் சுமந்த் ராமன் நடிகர் கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதாவது கோயம்புத்தூரில் எம்பி சீட் உறுதியாகிவிட்டது..? சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் செய்த விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும். திமுக விளம்பரம் ஓடிக் கொண்டிருந்த டிவியை உடைப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தார்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கு இப்படி பாராட்டு பத்திரம் வசிக்கிறார். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் இவருடைய மொழியை பார்த்தால் காக்கா பிடிப்பது போல் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

பல்வேறு அரசியல் நகர்வுகளை கணிக்க கூடிய சுமந்த் ராமன், நடிகர் கமலஹாசன் எம் பி தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவார் என்று கணித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிய வருகிறது.

அதிகாரப்பூர் அறிவிப்பு வரை பொறுத்து இருந்து பார்க்கலாம். நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்து ஒரே ஒரு எம்பி சீட்டைப் பற்றி எம்பி ஆகிறாரா..? அல்லது தனித்து நின்று களம் காண்பாரா..? என்பதை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version