அதுக்குள்ள இன்னொரு கல்யாணமா..? – கார்த்திகா நாயர் வீட்டில் டும் டும் டும்..!

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. அவரது அக்கா அம்பிகா.

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என உச்சத்தில் இருந்த ஹீரோக்களுக்கு ராதா, அம்பிகா தான் மாறி மாறி ஜோடியாக நடித்தனர்.

அது தமிழ் சினிமாவில் அம்பிகா, ராதா என்றும் சொல்லும் அளவுக்கு அவர்களது பங்களிப்பு இருந்தது. கேரளாவில் இருந்து வந்த அவர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர்.

தங்களது வசீகர அழகாலும், திறமையான நடிப்பாலும் அம்பிகா, ராதா இருவருமே ரசிகர்களின் அன்புக்குரிய நடிகைகளாக இருந்தனர். அதனால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றனர்.

அம்பிகா, ராதா ஹீரோயின்களாக நடித்த படங்கள் பலவும் வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. அதனால் சென்டிமென்டாக ராசியான நடிகைகளாகவும் பார்க்கப்பட்டனர்.

சினிமாவில் கடந்த 10, 15 ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்திவிட்ட அம்பிகா, ராதா இருவரும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.

ஆனால் அம்பிகா மட்டும் அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார். சீரியல்களில் நடிக்கிறார். ராதா, சில டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்கிறார்.

நடிகை ராதாவுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகா கோ படத்திலும், புறம்போக்கு என்னும் பொதுவுடமை படத்திலும் நடித்திருந்தார்.

அவரது தங்கை துளசி நாயர் கடல் என்ற படத்தில் நடித்திருந்தார். அம்பிகா, ராதா போல் இல்லாமல் இவர்களுக்கு சினிமாவில் பெரிய வெற்றி கிடைக்காததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி விட்டனர்.

கார்த்திகா நாயர்..

இந்நிலையில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு, கடந்த நவம்பர் 19ம் தேதி, திருவனந்தபுரத்தில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. ரோஹித் மேனன் என்பவரை கரம் பிடித்தார்.

இந்த கோலாகல திருமணத்தில் நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு, ராதிகா மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் பலரும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

புகுந்த வீட்டில் திருமணம்..

இப்போது மீண்டும் கார்த்திகா நாயர் புகுந்த வீட்டில் திருமணம் நடந்துள்ளது. கார்த்திகா நாயரின் கணவர் ரோஹித் மேனனின் தம்பிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

அதாவது முதல் மருமகளாக சென்ற ராதா மகள் கார்த்திகா நாயர், இப்போது புகுந்த வீட்டில் மூத்த மருமகளாகி விட்டார். மணமக்களை அவர் ஆசிர்வதிக்கும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை நடிகை ராதா வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதுக்குள்ள இன்னொரு கல்யாணம், கார்த்திகா வீட்டில் டும்டும்டும் என தகவலறிந்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள், முதலில் ராதாவின் இளைய மகள் துளசி நாயருக்கு தான் திருமணம் என்று நினைத்திருப்பார்கள்.

ஆனால் கார்த்திகா நாயர் புகுந்த வீட்டில், அவரது கணவரின் தம்பிக்கு இந்த திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version