“பாரீஸில் நீச்சல் உடையில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்திகா நாயர்..!” – தீயாய் பரவும் கலர்ஃபுல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா நாயர். இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற தமிழ் படத்தில் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

முதல் படமே தந்த வெற்றியை அடுத்து இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மொழியிலும் அதிக படங்கள் வந்து சேர்ந்தது. திரைப்படங்களில் படு பிஸியாக நடித்த இவர் 1991 ஆம் ஆண்டு ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். மூத்த மகள் ஒரு சில வெற்றி படங்களில் நடித்து வந்த நிலையில் இரண்டாம் மகள் துளசி மணிரத்தினத்தின் கடல் படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

எனினும் இவர்கள் இருவருக்குமே நினைத்தபடி திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை. இதனை அடுத்து மூத்த மகள் கார்த்திகாவிற்கு ரோஹித் மேனன் என்ற வரனை பார்த்து அண்மையில் திருமணம் செய்து வைத்தார்கள்.

இந்த திருமணமானது திருவனந்தபுரத்தில் கேரள முறைப்படி படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் ஏராளமான திரை நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு இத்திருமணத்தை சிறப்பித்தார்கள். இந்த திருமணத்தில் ராதா தன் மகளுக்கு கிலோ கணக்கில் நகைகளை அணிவித்து அழகு பார்த்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் திருமணமான தனது மகளுக்கு 500 சவரன் நகை மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல், சில சொத்துக்களை சீர் வரிசையாக கொடுத்திருக்கிறார். மேலும் இவரது மாப்பிள்ளை ரோஹித் சொத்து சுமார் 500 கோடி மதிப்பு இருக்கும் என்று பயில்வான் ஷாக்கிங் ரிப்போர்ட் கொடுத்திருந்தார்.

தற்போது திருமணம் நடந்து முடிந்த நிலையில் தேன் நிலவுக்கு கார்த்திகா நாயர் காதலர்களின் கனவு தேசமான பாரிசில் தங்களது ஹனிமூன் சென்று இருக்கிறார்கள். அங்கு பேமஸான ஈபில் டவர் உள்ளிட்ட பல பகுதிகளில் ரொமான்டிக் மூட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு அதிகமாக பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த ஜோடி திரைப்படத்தை மிஞ்சும் அளவு ரொமான்டிக் மூடில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version