“நம்பவே முடியல.. உண்மை இல்லன்னு தோணுது..” – நடிகை கஸ்தூரி பதற்றம்..! – என்ன காரணம்..?

நடிகை கஸ்தூரி என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேதனையான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதனை நம்ப முடியவில்லை.

ஆனால் உண்மையாக இருந்துவிடக் கூடாதா…? என்று மனம் ஏங்குகிறது என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி.

என்ன விஷயம்..? என்று பார்க்கலாம் வாருங்கள்.. தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுடைய மகள் துவாரகா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு பெண் பேசக்கூடிய வீடியோ காட்சிகள் நேற்று முதல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இது தமிழின ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய கேள்வியையும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் ஒரு விதமான குழப்பமான மனநிலையையும் உருவாக்கி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் மேதகு அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேதகு அவர்களின் மகள் என்ற அடையாளத்துடன் ஒரு பெண் பேசிக் கொண்டிருப்பது உள்ளபடியே பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனை பலரும் A.I தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கண்டிப்பாக அவர்களின் மகளாக இவர் இருக்க வாய்ப்பு கிடையாது. ஏதோ ஒரு மோசமான சதிகார திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.

அதே சமயம் நிஜமாகவே இது மேதகு அவர்களின் மகளாக இருக்க கூடாதா..? என்று ஏக்கத்துடனும்.. ஏக்கம் கலந்த நம்பிக்கையுடனும் பார்க்கும் உள்ளங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி இந்த பதிவை வெளியிட்டு என்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version