Kasthuri : அமைதிப்படை அல்வா சீனில் அப்படி செய்த சத்யராஜ்..! நடிகை கஸ்தூரி பரபரப்பு பதிவு..!

Kasthuri : தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் நடிகையான நடிகை கஸ்தூரி தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்தவர்.

தமிழைப் பொறுத்த வரை இவர் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளி வந்த சின்னவர், செந்தமிழ் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.

இதனை அடுத்து அண்மையில் இவரிடம் பேட்டி கண்ட நிருபர் ஒருவர் சத்யராஜோடு இணைந்து நடித்த அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் உங்களது அனுபவங்கள் எப்படி இருந்தது என்று கேட்டார்.

இதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த நடிகை கஸ்தூரி தான் நடித்த அமைதிப்படை அல்வா சீனில் அப்படி என்ன செய்தார் சத்யராஜ் என்பதைப் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே இது பற்றிய விஷயத்தில் நெட்டின்சன் ஒருவர் நடிகை கஸ்தூரியை டேக் செய்து அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் இருவரும் அத்துமீறி இருப்பது போல் தோன்றுவதாக கேள்வியை எழுப்பி இருந்தார்.

அந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க கூடிய வகையில் அவர் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் இருந்தது. சத்யராஜ் பற்றி கூறுகையில் நடிகர் சத்தியராஜ் மிகவும் நல்லவர். என்னால் அந்த அல்வா சீனை இன்று வரை மறக்க முடியாது.அது நல்ல ஞாபகத்தில் உள்ளது என்று கூறினார்.

மேலும் அந்த சீனில் நடிக்க எனக்கு சற்று கூச்சமாக இருப்பதை அறிந்து கொண்ட சத்யராஜ் மிகவும் ஜாக்கிரதையாக நடிக்கும் போது நடந்து கொண்டார்.

இந்த காட்சியை படமாக்க கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இருவருமே இதை நடிப்பாகத்தான் பார்த்தோமே தவிர நீங்கள் நினைக்கும் கண்ணோட்டத்தில் நாங்கள் நினைத்துக் கூடி பார்க்கவில்லை.

இவ்வளவு ஏன் அந்த சீன் எடுக்கும் போது என் அம்மா கூட என் அருகே தான் இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் டயலாக்குகளை சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் சார் எப்படி கையாண்டார்கள் என்பதை பற்றி என் அம்மா பார்த்து ஆச்சரியப்பட்டார்.

எனவே மற்றவர்கள் நினைப்பது போல அந்த சீனில் நடிகர் சத்யராஜ் மோசமாக நடந்து கொள்ளவில்லை. அமைதிப்படை படத்தில் நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவமாகவே உள்ளது.

அத்தோடு அந்த அல்வா சீனையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி தரக்கூடிய வகையில் நடிகை கஸ்தூரி அமைதிப்படை அல்வா சீனில் இப்படி தான் சத்யராஜ் செய்தார் என நடிகை கஸ்தூரி பரபரப்பு பதிவினை செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version