கலைஞர் 100 ராஜ்கிரணை கேவலமாக அவமானப்படுத்திய வடிவேலுவை வெளுத்து விட்ட கவுண்டமணி..!

நடிகர் சமீபமாக அதிக சர்ச்சைகளில், விமர்சனங்களில் சிக்கி வருகிறார். குறிப்பாக விஜயகாந்த் மறைவுக்கு அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஏற்கனவே கேப்டனுடன் பிரச்னை செய்தவர் என்றாலும் இரங்கல் செய்தியாவது வெயிட்டு வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கலைஞர் 100 விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கும், விழா நடக்கும் மேடை பகுதிக்கும் செல்ல ஒரு கிலோ மீட்டர் என்பதால், விழாவுக்கு வந்த நடிகர், நடிகையர் பேட்டரி காரில் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது விழா முடிந்து கார் பார்க்கிங் பகுதிக்கு வர பலரும், பேட்டரி காரில் பயணித்துள்ளனர். அப்படி ஒரு காரில் வடிவேலு ஏறிய நிலையில் அப்போது பேட்டரி காருக்குள் ராஜ்கிரண் இருந்துள்ளார். அவரை பார்த்தவுடன் பாதியில் காரில் இருந்து இறங்கிய வடிவேலு, அவருடன் ஒன்றாக அந்த காரில் செல்ல மாட்டேன் என்று கூறி வேறொரு பேட்டரி கார் வர அதில் ஏறிச் சென்று இருக்கிறார்.

தனது என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுவுக்கு முதன்முறையாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததே ராஜ்கிரண்தான், அந்த நன்றியை கூட வடிவேலு நினைத்து பார்க்கவில்லை என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

மேலும் செய்யாறு பாலு கூறுகையில், எனக்கு இந்த தகவலை என் ராசாவின் மனசிலே படத்தில் புரடக்சன் மேனேஜராக பணிசெய்த நடிகர் சிசர் மனோகர்தான் சொன்னார். அப்போது என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்டமணி நடித்துள்ளார். அந்த படத்தில் நடிக்க வடிவேலுவை ராஜ்கிரண் வரச்சொல்லி இருக்கிறார்.

வரக்காப்பி, வடை சாப்பிடும் பழக்கமுள்ள கவுண்டமணி, அதை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்த வடிவேலுவை பார்த்து யார் இது என விசாரித்திருக்கிறார். மதுரையில் இருந்து வந்த புதுபையன். இந்த படத்தில் நடிக்கிறார் என கூறியிருக்கின்றனர்.

அடுத்து, அந்த படத்தில் நாக்குல சனி என ஜோசியம் சொல்ல, அப்போது வரும் கவுண்டமணியிடம் சவுக்கியமாண்ணே என்று வடிவேலு கேட்க, அவரை கவுண்டமணி உதைத்து மிதிப்பது போன்ற காட்சி இருந்தது. அப்படி நடிக்கும்போது உண்மையிலேயே வடிவேலுவை பலமுறை உதைத்து மிதித்து இருக்கிறார் கவுண்டமணி.

இதை பார்த்து தடுத்த சிசர் மனோகரிடம், அவனவன் நாடகத்துல நடிச்சு, கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வர்றான். இவன், மதுரையில் இருந்து நேரா பெட்டியை எடுத்துட்டு நடிக்க வந்துட்டான், என கோபமாக கூறியிருக்கிறார். அதனால் நன்றி கெட்ட மனிதராக இருக்கும் வடிவேலுவை அப்போதே கவுண்டமணி வெளுத்து விட்டிருக்கிறார் என்ற உண்மையை செய்யாறு பாலு, வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version