பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க..? கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!

தற்போது திரையுலகில் போட்டி என்பது பெரும் அளவு உள்ளது. குறிப்பாக முன்னணி நடிகைகளுக்கும், வளர்ந்து வரும் நடிகைகளுக்கும், புதுமுக நடிகைகளுக்கும் வாய்ப்பு கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கக்கூடிய வேளையில் கயல் ஆனந்தி செய்திருக்கும் விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வாய்ப்புக்காக இப்படியா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கயல் ஆனந்தி..

கயல் ஆனந்தி தெலுங்கு படமான பஸ் ஸ்டாப் எனும் திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு அறிமுக நாயகி ஆக அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பொறியாளன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பிரபு சாலமனின் கயல் என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடித்து வெற்றி பெற்ற கயல் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

இதனை அடுத்து தமிழில் படப் பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வரிசையில் விசாரணை சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்காரு குமாரு, ரூபாய், மன்னர் வகையறா, படியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் கயல் படத்தின் ஹீரோ சந்திரனுக்கு பட வாய்ப்பு கிடைத்ததோ என்னவோ தொடர்ந்து ஆனந்திக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார். மேலும் தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் தீடீர் என்று காதல் திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பை அறிவித்த அத்தோடு இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது துணை இயக்குனர் சாக்கரடீஸ் என்பவரை தான். 2021 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பத்தை மறைத்தேன்..

இவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் திருமணமான பின் நடித்த போது கர்ப்பமாக இருந்த விஷயத்தை மறைத்து இருக்கிறார். அந்த விஷயம் தான் தற்போது பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்வார்களா? என்று பேசக்கூடிய வகையில் அமைந்துவிட்டது.

கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் பட வாய்ப்பு பறிபோய்விடும் என்பதற்காக கர்ப்பமான விஷயத்தை பட குழுவில் மறைத்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மேலும் தான் கர்ப்பமாக இருக்கிற விஷயம் தெரிந்தால் அந்த படத்தில் இருந்து தன்னை நீக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் பட குழுவுக்கும் இது தேவையில்லாத தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து அவர் கர்ப்பமாக இருந்த விஷயத்தை மறைத்து விட்டதாக கூறியிருக்கிறார்.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் கயல் ஆனந்தி பட வாய்ப்புக்காக இப்படி பண்ணுவீங்களா? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ரசிகர்களின் கேள்விகளில் நியாயம் இருப்பதால் அதற்கு உரிய பதிலை நிச்சயம் கயல் ஆனந்தி கொடுப்பார் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.

சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இது போன்ற சில சங்கடங்கள் ஏற்படுகிறது கர்பமாக இருக்கும் பெண்களால் சரியாக பணியாற்ற முடியாது என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version