நீங்க அதை யூஸ் பண்ணுவீங்களா..? இரட்டை அர்த்த கேள்விக்கு கயல் ஆனந்தி கொடுத்த நச் பதில்..!

2012 ஆம் ஆண்டு வெளிஸவந்த பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆனந்தி இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளி வந்த பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இவரின் முதல் படத்தில் சிறந்த நடிப்பை பார்த்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பிரபு சாலமனின் கயல் படத்தில் நடித்து வெற்றி நாயகியாக ரசிகர்களின் மத்தியில் வலம் வந்தார்.

கயல் ஆனந்தி..

தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் கயல் படத்தை அடுத்து விசாரணை, சண்டி வீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கா குமாரு, ரூபாய், மன்னர் வகையறா, படியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள் படத்தில் வித்தியாசமான கேரக்டரை சிறப்பாக செய்த இவர் திடீரென திரையுலகில் பீக்கில் இருக்கும் போதே காதலித்து துணை இயக்குனர் சாக்ரடீசை திருமணம் செய்து கொண்டு பிள்ளைக் குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

ஆனால் திருமணத்துக்கு பிறகும் நடித்து வரக்கூடிய ஆனந்தி தற்போது மங்கை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை குபேந்திரன் காமாட்சி இயக்கியிருக்கிறார். மேலும் ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளி வர இருக்கும் படத்தில் கயல் ஆனந்தி, ராம்ஸ், துஷி ஆதித்யா, கதிர் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.

இரட்டை அர்த்த கேள்விக்கு சவுக்கடி..

தமிழில் வெளி வந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய கயல் ஆனந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளர் ஒரு கேள்வியை எழுப்பினார்.

அந்தக் கேள்வியானது உங்களுக்கு இருக்கும் நட்பு திறமையை படங்களில் முழுதாக பயன்படுத்தி இருக்கிறோம் என்ற உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டு இருக்கிறதா? நீங்கள் உங்கள் முழு நடிப்பு திறமையும் யூஸ் செய்து இருக்கிறீர்களா? என்ற கேள்வி தான் அது.

இதனைக் கேட்ட கயல் ஆனந்தி என்னுடைய நடிப்பை நீங்கள் யூஸ் பண்ணுவீங்களா? என்று கேட்க அதற்கு தொகுப்பாளர் கண்டிப்பாக நான் யூஸ் பண்ண மாட்டேன் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடிகை கயல் ஆனந்தி கவர்ச்சியாக நடிப்பதை தான் உங்கள் முழு திறமையையும் பயன்படுத்தி விட்டீர்களா? என்ற இரட்டை அர்த்தத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார் தொகுப்பாளர். அதனை லாவகமாக புரிந்துகொண்டு அசால்டாக மடக்கி பதிலடி கொடுத்த கயல் ஆனந்தியின் சாமர்த்தியத்தை வெகுவாக அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மறைமுகமாக இரட்டை அர்த்த கேள்வி கேட்ட தொகுப்பாளருக்கு தக்க சவுக்கடியை கயல் ஆனந்தி கொடுத்திருக்கிறார். இவரது பதில் நற்சென்று இருந்ததாக ரசிகர்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிக அளவு பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த விஷயம் இணையத்தில் தீயாய் பரவுகிறது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version