கடைசியா இதை பண்ண முடியல.. மெரீனாவில் சிலை வைக்கணும்.. நடிகை ரேகா.. கஞ்சா கருப்பு..!

கடலோரக் கவிதைகள் படத்தில் டீச்சராக வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை ரேகா மற்றும் காமெடி நடிகரான கஞ்சா கருப்பு கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பிறகு சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

இவரது இறுதி அஞ்சலியில் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு ஷூட்டிங்கில் நடிகை ரேகா இருந்த காரணத்தினால் தான் விஜயகாந்தின் முகத்தை பார்க்க வர முடியவில்லை என கூறி இருக்கிறார்.

விஜயகாந்தின் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த என்னால் அவரது இறப்பிற்கு வர முடியவில்லை என்ற சோகத்தை வெளிப்படுத்தினார். அத்தோடு எம்ஜிஆருக்கு பிறகு மிகப் பெரிய அளவு மக்கள் வெள்ளத்தில் சென்னையே திணற கூடிய அளவு இவருக்கு இன்று வரை அஞ்சலி செலுத்த மக்கள் வந்த வண்ணம் இருப்பது அவருடைய தனி தன்மையை வெளிப்படுத்துகிறது.

இவரோடு இணைந்து சுமார் ஆறு படங்கள் செய்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவர் அனைவரிடமும் சகதமாக பழகுவதோடு பசி என்று வருபவர்களுக்கு வாரி வழங்கக்கூடிய வள்ளலாக திகழ்ந்திருக்கிறார். சிறிய நடிகர்கள் இருந்து பெரிய நடிகர்கள் வரை அவர் இருந்தால் ஒரு பக்க பலமாக இருக்கும்.

எனது தந்தையின் இறப்புக்குப் பிறகு நான் இதுவரை யாருக்காகவும் கண்ணீர் வடித்தது இல்லை. எனினும் விஜயகாந்த் இறந்த பிறகு அவரது மகன்கள் இறந்த தனது தந்தையை பார்த்து கண்ணீர் வடித்ததை பார்த்து என் கண்களில் தானாகவே கண்ணீர் வந்து விட்டது. மேலிருந்து நம்மை வழி நடத்தி ஆசீர்வாதம் செய்வார் என நடிகை ரேகா கூறினார்.

அது போலவே நடிகர் சங்க கட்டிடத்திற்கு இவரது பெயரை சூட்டுவது மிகவும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கும். அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதோடு மட்டுமல்லாமல் அவர்களது இரண்டு குழந்தைகளும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்தார்.

இதனை அடுத்து காமெடி நடிகர் கஞ்சா கருப்பு விஜயகாந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். இவர் விஜயகாந்தை குறித்து பேசுகையில் புரட்சித்தலைவர் என்ற சொல்லுக்கு ஏற்ற வண்ணம் நடந்து கொண்டவர். இதற்கு காரணம் தஞ்சையில் மருத்துவமனை இல்லை அந்த மருத்துவமனைக்கு தேவையான எந்த உபகரணங்களும் இல்லை என்ற நிலையில் அனைத்தையும் வாங்கி தந்தவர்.

தான் உண்ணக்கூடிய அசைவ உணவுகள் அனைத்தையுமே எல்லா மக்களுக்கும் யூனிட்டில் கொடுத்து அழகு பார்த்த அற்புத மகான். எனவே தான் கருடன் அவரை அடக்கம் செய்யும் போது விண்ணில் அவரை நோக்கி சுற்றி வந்தது என்ற கருத்தையும் கஞ்சா கருப்பு கூறினார்.

அத்தோடு நடிகர் சங்க கட்டடத்திற்கு அவர் பெயரை வைத்தால் போதாது, மெரினா கடற்கரையில் அவருக்கும் ஒரு சிலையை நிறுவ வேண்டும். அவர் நம்மோடு தான் ஏதோ ஒரு ரூபத்தில் வாழ்கிறார் என தனது ஆசையை கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version