“அங்க கைய வச்சு அப்படி பண்ணுனாங்க..” கசப்பான அனுபவத்தை கூறிய கீர்த்தி பாண்டியன்..!

நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். மேலும் இவர்களது திருமணம் இயற்கையான சூழலில் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற வேறுபட்ட கதை அம்சம் நிறைந்த படங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளி வந்த தெகடி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

எனினும் இவரது போராத காலம் ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் நடித்த போதும் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் மார்க்கெட்டில் இழந்தார். இதன் பிறகு ஒ மை கடவுளே திரைப்படம் மாபெரும் கிட்டை கொடுத்தது.

தற்போது இவர் நடிப்பில் சபாநாயகன் என்ற திரைப்படமும், இவர் மனைவி நடித்து வெளி வந்திருக்கும் கண்ணகி திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கண்ணகி திரைப்படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த பேட்டியில் இவரிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது. அதாவது கீர்த்தி பாண்டியன் பஸ்ஸில் பயணம் செய்த போது அத்துமீறி யாராவது கையை வைத்த சம்பவம் பற்றி தான் கேட்டிருந்தார்கள்.

அந்தக் கேள்விக்கு பதில் அளித்த அவர் பெண்கள் என்றாலே இந்த மாதிரியான விஷயங்களை எப்போதும் கடந்து வந்திருக்க வேண்டும். அப்படி பார்க்கும் போது நான் நடிகையாக இருந்தாலும் இந்த அனுபவம் எனக்கும் உள்ளது பேருந்தில் பயணிக்கும் போது தொடக்கூடாத இடங்களை தெரியாமல் தொடுவது போல அத்து மீற முயற்சித்திருக்கிறார்கள் என கூறினார்.

தனக்குத் தெரியாத பல ஊர்களுக்கு செல்லும் போது இது போன்ற தவறான விஷயங்கள் நடந்துள்ளது என்பதை மறைக்காமல் ஓபனாக கீர்த்தி பாண்டியன் பேசி இருப்பது பலரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதனை அடுத்து பெண்கள் என்றாலே அவர்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், இது போன்ற அவலங்கள் இன்றும் தொடர்கதையாக தான் உள்ளது. இதற்கு எப்போதும் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version