இது தான் இந்த நடிகரின் கிளாமருக்கு காரணம்..! – வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் அறிமுகமானவர். இவரது அம்மா மலையாளத் திரை உலகில் நடித்த நடிகை மேனகா. எனவே திரை உலக என்ட்ரி இவருக்கு எளிதாக கிடைத்தது.

கீர்த்தி சுரேஷ்..

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் மலையாள மங்கையான கீர்த்தி சுரேஷின் குடும்பமே ஒரு கலை குடும்பமாக திகழ்கிறது.

இவர் தனது பள்ளியை திருவனந்தபுரத்தில் இருக்கும் கேந்திரிய வித்யாலய பள்ளியில் படித்திருக்கிறார். சினிமாவின் மேல் கொண்டிருந்த அதீத காதல் காரணத்தால் திரைப்படங்களில் சிறு வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்கின்ற நடிகைகளில் முன்னணியில் இருந்து வரும் இவர் திரை உலகில் என்ட்ரி கொடுத்து பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அதற்கான விழாவை கேக்கு வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

இவர் மோகன்லாலோடு இணைந்து நடித்த கீதாஞ்சலி திரைப்படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து பல திரைப்படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி இருக்கும் இவர் அண்மையில் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வெளிவரக்கூடிய நிலையில் உள்ளது.

ஹிந்தி படத்திலும் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ் அட்லி தயாரிப்பில் ஹிந்தி ரீமேக் ஆன தெறி படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட மகாநதி என்ற படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாகவே இவர் வாழ்ந்து காட்டியதை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

நடிப்போடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடனம் ஆடக்கூடிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர் பத்து வயது குழந்தைக்கு தாயாக சாணிக்காகிதம் படத்தில் நடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

மகேஷ் பாபு கிளாமர்..

நடிகர் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களோடு நடித்து கமர்சியல் நாயகியாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் அண்மை பேட்டி ஒன்று கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷிடம் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் கிளாமருக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு எந்த நடிகைகளும் பொதுவாக பதில் அளிக்காமல் சிரித்தபடி தவிர்த்து விடுவார்கள் அல்லது அது அவருக்கு தான் தெரியும் என்று மழுப்பனான பதிலை கூறி சிக்கலில் இருந்து தப்பித்து விடுவார்கள்.

ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த கேள்விக்கு வெளிப்படையான பதிலை கொடுத்திருக்கிறார். அந்த பதிலில் அவர் கூறியதாவது மகேஷ் பாபுவின் கிளாமருக்கு காரணம் அவர் எப்போதும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்.

இங்கு மகிழ்ச்சி என்றால் அது மனம் சார்ந்த உள்ளார்ந்த மகிழ்ச்சி. இவர் தன்னை மட்டுமல்லாமல் பிறரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவதோடு தன்னை எப்போதும் அமைதியாகவும் வைத்துக் கொள்கிறார்.

எனவே தான் மகேஷ்பாபுவை பொருத்த வரை எந்த விஷயத்திலும் அதிகப்படியான ரியாக்ஷனை அவரிடம் யாரும் எதிர்பார்க்க முடியாது. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மகேஷ்பாபு இப்படித்தான் இருக்கிறார்.

மேலும் இவர் எந்த விஷயமாக இருந்தாலும் அதை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாளுகிறார். இதுவே மற்றவர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு எப்போதும் மன மகிழ்ச்சியோடும், கிளாமராகவும் இருக்க உதவுகிறது என கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவின் கிளாமருக்கு காரணத்தை வெளிப்படையாக கூறியிருக்கும் விஷயம்தான் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version