“அதுக்கு ஆப்ரேஷன் பண்ணியான்னு கேக்குறாங்க.. ஆனால்…” ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய உடல் எடை குறைத்தது பற்றி சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது மகாநதி படத்தில் நடித்த முடித்த பிறகு தான் நான் உடற்பயிற்சி செய்யவே தொடங்கினேன்.

அதற்கு முன்பும் உடற்பயிற்சி செய்திருக்கிறேன் என்றாலும் கூட கடினமான உடற்பயிற்சிகளை செய்தது கிடையாது.

மகாநதி படம் முடிந்த பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். எட்டு மாதத்தில் 10 கிலோ எடை குறைந்தேன்.

பலரும் நினைப்பது போல நான் ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ எடை குறைந்து விடவில்லை. என்னுடைய 10 கிலோ எடையை குறைக்க எனக்கு எட்டு மாதங்கள் ஆனது.

இன்னும் சிலர் ஆபரேஷன் ஏதேனும் செய்து கொண்டீர்களா..? என்றெல்லாம் கேட்டார்கள். அப்படியெல்லாம் எதுவும் நான் செய்து கொள்ளவில்லை.

உணவு முறையில் சிறு மாற்றங்கள் செய்தேன்.. உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version