மதுபோதையில் கீர்த்தி சுரேஷை பின்புறம் ஓங்கி அடித்த ஆசாமி..! அவரே கூறிய தகவல்..!

தமிழில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இளம் வயதில் பல நல்ல கேரக்டர்களில் திறம்பட நடித்தவர். நல்ல நடிப்பாற்றல் கொண்டவர்.

குறிப்பாக நடிகை சாவித்திரி தேவி வாழ்க்கையை மையப்படுத்திய நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

சர்க்கார், பைரவா, ரெமொ, ரஜினிமுருகன், தொடரி, மாமன்னன், சாமி 2, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகையாக கவனம் பெற்றிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இந்தியிலும் அவர் நடிக்கிறார்.

இயக்குநர் அட்லீ தயாரிக்கும் பேபி ஜான் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீ மேக்கில் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

குடிபோதை ஆசாமி

அதுபற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ஒரு நாள் நானும் எனது தோழியும் தெருவில் நடந்து சென்றுக்கொண்டு இருந்தோம்.

அப்போது ஒரு குடிபோதை ஆசாமி என் மீது வந்து விழுந்து விட்டான். நன்றாக குடித்துவிட்டு வந்து என் மேல் விழுந்தவனை, நான் ஓங்கி அடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

திடீர் தாக்குதல்

கொஞ்ச நேரத்துக்கு பின், என் தலையில் எதுவோ பலமாக அடித்தது போல இருந்தது. நான் விபத்தில் ஏதோ சிக்கி விட்டேன். இறந்து போய்விட்டேன் என்று கூட அப்போது தோன்றியது. ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை.

என்னிடம் அடிவாங்கிய அந்த ஆசாமி தான், திடீர் தாக்குதல் நடத்தி என் தலையில் அடித்துவிட்டு வேகமாக தப்பி ஓடுகிறான் என்பது எனக்கு தெரிந்தது.

எனக்கு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே புரியவில்லை. அதன்பிறகு நானும் என் தோழியும் துரத்திச் சென்று அவனை பிடித்தோம்.

பக்கத்தில் ஒரு போலீஸ் பூத் இருந்தது. அங்கு சென்று நடந்ததை சொல்லி அவனை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம், என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மதுபோதையில் தன்னை பின்புறமாக வந்து ஓங்கி அடித்த ஆசாமி குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு, கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து அவரே கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version