“மாஸ் ஹீரோவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? தளபதியை நக்கல் செய்த கீர்த்தி சுரேஷ் அப்பா..!

தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பீஸ்ட் படம் மாபெரும் தோல்வியை அடைந்ததை அடுத்து வாரிசு படமாவது விஜய்க்கு கம் பேக் தருமா? என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டது.

இதனை அடுத்து உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து லியோ திரைப்படத்தை இயக்கினார்.

மாறுபட்ட கதை அம்சத்தோடு ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஹைனா காட்சிகளை வைத்து தெறிக்க விட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது.

மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் கூட்டணியில் வெளி வந்த இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் இந்த லியோ படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.

பாக்ஸ் ஆபிஸில் சுமார் 598 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்திருக்கும் இந்த படத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்தது. 

இந்நிலையில் தற்போது விஜய்யோடு கிசுகிசுக்கப்பட்டு வந்த கீர்த்தி சுரேஷின் தந்தை லியோ படத்தை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படத்தைப் பற்றி கீர்த்தியின் தந்தை பேசுகையில் எதார்த்தத்தை தாண்டி 300 பேர்களுக்கு மேல் ஒருவர் அடிப்பது போல கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சூப்பர் ஹியூமன் போல் விஜய் செயல்பட்டு இருப்பது சற்று ஓவராக உள்ளது போல் பேசி இருக்கிறார்.

இவரின் இந்தப் பேச்சானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மலையாளத் திரை உலகில் தயாரிப்பாளராக இருக்கும் சுரேஷ்குமார் ஏன்? இப்படி பேசினார் என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version