தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக விளங்கியவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவை நடிகையாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை மேடை நாடகத்திலிருந்து தான் ஆரம்பித்தார். இவரும் நடிகர் வடிவேலு இணைந்து நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கின்றன.
இருவருடைய காம்போவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு காம்போ என்று கூறலாம். ஆனால், நடிகை கோவை சரளாவின் வளர்ச்சியை தடுத்து அவருடைய பட வாய்ப்புகளை தட்டி பறித்த நடிகர் வடிவேலு பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர வைக்கும் உண்மைகள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, நடிகை கோவை சரளா பள்ளி செல்லும் நாட்களிலேயே மேடை நாடகங்களில் கலந்து கொண்டு பெரியவர்களிடம் பாராட்டு பெற்றவர். அந்த வகையில், மறைந்த முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் அவர்களின் பாராட்டை பெற்ற ஒரு நடிகை கோவை சரளா.
இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே சினிமா வாய்ப்பு கிடைத்து விட்டது. தன்னுடைய பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு கிடைத்த வாய்ப்பு சற்று விசித்திரமான வாய்ப்பு.
அவர் படித்துக் கொண்டிருப்பது பத்தாம் வகுப்பு.. ஆனால் அவருக்கு கிடைத்த கதாபாத்திரம் 32 வயது பெண்மணியாக நடிக்க கூடிய கதாபாத்திரம்.. அதனை அவ்வளவு அருமையாக நடித்து ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். இயக்குனர் பாக்கியராஜ் வியந்து போய்விட்டார்.
அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் தான். அந்த படத்தில் 32 வயது பெண்ணாக நடித்து அசத்தியிருந்தால் நடிகை கோவை சரளா.
ஆனால், அவருக்கு அப்போதுதான் வயது 16. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் வடிவேலு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை கோவை சரளாவுக்கு என இப்போது வரை தனி ரசிகர் பட்டாலுமே இருக்கிறது.
சில சந்தர்ப்பவாத செயல்களால் கோவை சரளாவின் மார்க்கெட் கடகடவென குறைந்தது. நடிகை ஆச்சி மனோரமாவை எப்படி ஒரு பொம்பள சிவாஜி என்று அனைவரும் கூறுகிறார்களோ.. அதுபோல நடிகை கோவை சரளா ஒரு பொம்பள கமல்ஹாசன் என்று சொல்லலாம்.
அவரிடம் அந்த அளவுக்கு திறமையை புதைந்திருக்கிறது. காமெடி மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் அடித்து அசத்தக்கூடிய ஒருவர்.
வடிவேலு மற்றும் கோவை சரளா இணைந்து நடித்த பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
வடிவேலு, கோவை சரளா இருவரும் திரையில் தோன்றினாலே கைத்தட்டல்கள் அள்ளும். ஆனால், வடிவேலுக்கு கோவை சரளா வளர்வது சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே கோவை சரளாவை ஒதுக்க ஆரம்பித்தார் வடிவேலு.
நடிகர் வடிவேலுவுக்கு எப்போதுமே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. திரையில் தன்னைவிட ஒரு கதாபாத்திரம் தன்னுடைய நடிப்பை ஓவர் டேக் செய்கிறது.. தன்னைவிட ரசிகர்களை அதிகம் கவரும் விதமாக இருக்கிறது.. என்றால் படப்பிடிப்பு தளத்திலேயே அதனை கவனிக்க கூடியவர் நடிகர் வடிவேலு.
தன்னை யாராவது ஓவர் டேக் செய்கிறார்கள்.. டாமினேட் செய்கிறார்கள்.. ஸ்கோர் செய்கிறார்கள் என்றால் படப்பிடிப்பு தளத்திலேயே இயக்குனருடன் சண்டை போட்டு அந்த காட்சியை நீக்க சொல்லி விடுவார்.
அந்த நடிகரை மிரட்டி என்னைவிட நீ என்ன பெரிய நடிகனாடா நீயி.. என்னை விட பெரிய ஆளா..? கொடுத்த காசுக்கு நடிடா வெண்ண.. என்று அந்த இடத்திலேயே அந்த நடிகர்களை திட்ட ஆரம்பித்து விடுவார். இது நடிகர் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு வேண்டுமானால் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால் ஒரு மனிதராக சக நடிகர்களிடம் நடிகர் வடிவேலு தோற்று விட்டார். அவருடன் நடித்த நடிகர்களிடம் வடிவேலு பற்றி கேட்டால் கழுவி கழுவி ஊத்துவார்கள்.
அதே போலத்தான் நடிகை கோவை சரளா தன்னுடன் நடித்து வளர்வது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கோவை சரளா நடித்தால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் நான் தனியாக நடித்தாலே பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் எனக்கு கோவை சரளாவை நீங்கள் ஜோடியாக போட வேண்டிய அவசியம் கிடையாது என இயக்குனர்களுடன் சண்டை போட்டு நடிகை கோவை சரளாவின் பட வாய்ப்புகளை தட்டி விட்டிருக்கிறார் வடிவேலு.தயாரிப்பாளர்களும் வடிவேளுவுக்காக கோவை சரளாவை கழட்டி விட்டிருகிறார்கள்,
அதன் பிறகு நடிகை கோவை சரளாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்து விட்டார்கள். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த கோவை சரளா அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் தோன்றிக் கொண்டிருந்தார் என கூறியிருக்கிறார் சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.