புயல் நிவாரணம்.. கண்டுகொள்ளாத நடிகர் விஜய்.. குறித்து KPY பாலா கூறிய ஒரு வார்த்தை..!

விஜய் தொலைக்காட்சியில் எந்த பக்கம் பார்த்தாலும், அந்த பக்கம் KPY பாலா கண்டிப்பாக இருப்பார். அந்த அளவு தன்னுடைய ரைமிங் காமெடியின் மூலம் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.

இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தனது திறமையை வளர்த்து வரும் வளரும் நடிகராக இருக்கக்கூடிய நிலையில் சம்பாதிக்கும் பணத்தில் முடியாத நபர்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனை அடுத்து ஈரோடு பக்கம் இருக்கும் மலை கிராமத்தில் சுமார் 8000 மக்களுக்கு மருத்துவ உதவிக்காக 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்சை  தன் சொந்த பணத்தில் வாங்கி கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலால் பல்லாயிரக்கணக்கானோர் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இதனை அடுத்து புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார்.

பாலாவின் இந்த உதவியை பார்த்து பொது மக்கள் பலரும் அவரை பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல் பெருமையோடு பேசி வருகிறார்கள். அதிகளவு பணம் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட இந்த அளவு பொது மக்களின் மீது அக்கறை எடுத்துக்கொண்டதில்லை என்ற கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றினை பாலாவிடம் எடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பாலாவிடம் விஜய் போல உங்களுக்கு அரசியலில் சாதிக்க ஆசை ஏதேனும் உள்ளதா? என்ற கேள்வியை முன் வைக்க பாலா என்ன விடை அளித்தார் தெரியுமா?

விஜய் அண்ணா ஒரு மலை நான் சாதாரணமானவன் என்று மிக சிம்பிளாக தன்னடக்கத்தோடு கூறிய பதிலை கேட்டு பலரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். எனினும் இவரை போன்ற இளைஞர்கள் தன்னலம் பாராது பிறர் நலத்திற்காக உழைப்பது, சமுதாய முன்னேற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version