பத்து வருஷத்துல எவ்ளோ வித்தியாசம் பாருங்க..! – கிருத்திகா அண்ணாமலை வெளியிட்ட வீடியோ..!

தொலைக்காட்சிகளில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை.

என்றாலும் சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

அந்த வகையில் மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை அசத்தினார். மானாட மயிலாட நிகழ்ச்சியிலேயே கிளாமரான ஆட்டம் போடும் ஒரே ஆள் என்றால் அது நடிகை கிருத்திகா அண்ணாமலை என்று தான் கூற வேண்டும்.

இடையில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியம் ஆகிவிட்ட கிரித்திகா அண்ணாமலை உடல் எடை கூடி குண்டாகி போனார்.

இதனால் இவருக்கு சீரியல் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. அதன் பிறகு மீண்டும் உடல் எடை குறைத்து பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை.

இந்நிலையில், 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த தன் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமீபத்தில் தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு 2013க்கும் 2023 எவ்வளவு வித்தியாசம் பாருங்க என்று க்யூட்டான ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version