கேட்கக்கூடாத கேள்வி கேட்ட ரசிகர்..! புகைப்படத்துடன் பதில் கொடுத்த கிருத்திகா அண்ணாமலை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகை தான் கிருத்திகா. இவர் இந்த சீரியலில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் இல்லத்தரசிகள் விரும்பும் நாயகியாக விளங்கினார்.

இதனை அடுத்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்.

தற்போது நடிகை கார்த்திகா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். இந்த பேச்சில் தனது விவாகரத்து குறித்தும், மகன் குறித்தும் சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

மேலும் பேட்டியின் போது அவர் தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது என்ற விஷயத்தை பதிவு செய்து இருக்கிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் சுமார் 83 கிலோ உடல் எடை அதிகரித்து இருந்தது.

மேலும் அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதால் தோற்றம் எப்படி இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார்கள். என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து எப்படி இருக்க.. பெருசா இருக்கா.. என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார்.

ஒரு கால கட்டத்தில் என் உடலைப் பார்த்து உருவ கேலி செய்து என்னை படாத பாடுபடுத்திய அவரோடு சேர்ந்து வாழ வேண்டுமா? என்பது போல எனது மன நிலை மாறியதை அடுத்து இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டோம் என்ற கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்ற கேள்வியை இணையதள வாயிலாக எழுப்பி இருக்கிறார். அதற்கு பதிலாக நான் என்னுடன் என் மகன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இது என் மகன் ப்ரோ என்று பதில் அளித்து விட்டேன் என கூறி இருக்கும் கருத்தானது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

எனவே திருமணம் ஆகி விவாகரத்தாகி தன் குழந்தைகளுக்காக வாழும் பெண்களிடம் இது போன்ற கேள்வியை கேட்பதை தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்ட இருப்பவர்கள், இது போன்ற கேள்விகளால் மேலும் பாதிப்படைவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தற்போது இந்த பேட்டி வைரலாக ரசிகர்களிடையே பரவி வருவதோடு அவரது மனநிலையை புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக ஒருமித்த குரலில் அவர் பக்கம் இருப்பது கிருத்திகாவிற்கு சந்தோஷத்தை அதிகரித்து உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version