பெற்ற மகனை தத்துக்கொடுத்த நடிகை கீர்த்திகா அண்ணாமலை..! காரணம் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஏஐ தொழில்நுட்ப காலத்தில் நாம் வாழ்கிறோம். நடிகர் விஜயகாந்த் சமீபத்தில்தான் காலமானார். அவரது நடிப்பில் ஊமைவிழிகள் 2 பாகத்தை எடுத்து வெளியிட முதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஆபாவாணன் இப்போது தயாராகி வருகிறார்.

இறந்த மனிதரை எப்படி திரையில் கொண்டு வருவது என்றால், அதுதான் ஏஐ தொழில் நுட்பம். இந்த தொழில்நுட்பத்தில் ஒருவரது புகைப்படத்தை வைத்தே அவர் பேசுவது போல, சிரிப்பது போல, கோபப்படுவது போல சினிமா திரையில் கொண்டு வந்துவிட முடியும்.

அப்படிப்பட்ட நவீன தொழில்நுட்பத்தில் வாழ்ந்தாலும் இன்னும் ஜோதிடம், ஜாதகம், தினசரி ராசிபலன்கள் பார்த்தல் என பலவிதமான நம்பிக்கைகள் இன்னும் மக்கள் மத்தியில் இருக்கின்றன. நாளுக்கு நாள் இது அதிகரித்தும் வருகின்றன.

பிரபல டிவி சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் கிருத்திகா அண்ணாமலை. இவர் டிவி சீரியலுக்கு வரும் முன்பே ஆண்டான் அடிமை, பார்வை ஒன்றே போதுமே படங்களில் சத்யராஜ், குணால் போன்ற ஹீரோக்களுக்கு தங்கச்சி கேரக்டர்களில் நடித்தவர்.

ஆனால் சினிமாவில் தொடர் வாய்ப்பு வராததால் மீண்டும் சீரியலில் அதிக ஆர்வம் காட்டினார். அதில் மெட்டி ஒலி இவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை தந்தது. இப்போது பாண்டவர் இல்லம் சீரியலில் பிரதான வில்லியாக வந்து ரசிகர்களை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்.

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை தனக்கு குழந்தை பிறந்ததும் நீங்கள் உங்கள் கணவரை பிரிந்து விடுவீர்கள். உங்கள் பிள்ளையை தத்து கொடுத்து அதன் பிறகு நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் பிரிய மாட்டீர்கள் என்று அவருக்கு நெருக்கமான ஜோதிடர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.

இதன் காரணமாக தன்னுடைய உடன் பிறந்த அண்ணனுக்கு தன்னுடைய மகனை தத்து கொடுத்து அதன் பிறகு வாங்கி இருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை ஆனாலும் அவர் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பதுதான் இதில் ஆச்சரியப்படுத்துகிற கூடுதல் தகவல்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version