என் கணவர் கொடுத்த அந்த வலி.. இதனால 10 நாள் ICUவில் இருந்தேன்..! – கிருத்திகா அண்ணாமலை பகீர் தகவல்..!

சன் டிவியில் சீரியல் நடிகையாக நடித்த கிருத்திகா அண்ணாமலை பற்றி அதிக அளவு அறிமுகம் தேவையில்லை. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் மெட்டி ஒலி என்ற சீரியல் நடித்தார். இந்த சீரியல் பரபரப்பாக ஒளிபட்டு ஒவ்வொரு தமிழக இல்லத்தரசிகளின் மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்த தொடராக மாறியது.

இதனை அடுத்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. அந்த வாய்ப்புகளை பக்குவமாக பயன்படுத்திக் கொண்டவர் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் அதிக அளவு நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியை இவர் அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் இவர் ஏன் விவாகரத்து செய்து கொண்டார் என்பதை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

மேலும் இவருக்கு விவாகரத்து ஆகி கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது இவரது உடல் எடை 83 கிலோ இருந்ததாம். இந்த உடல் எடை அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டார்.

எனினும் எனது கணவர் என் உடல் எடையை பார்த்து பல வகைகளில் நக்கல் செய்திருக்கிறார். ஒரு காலத்தில் இந்த நக்கல் சண்டையாக மாறி மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது எனக் கூறினார்.

அத்துடன் தன்னை நடிக்க வேண்டாம் என்று அவர் எந்த சமயத்திலும் கூறவில்லை. நான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருக்கும் போது முந்தானை முடிச்சு சீரியல் நடித்திருந்தேன். இதனை அடுத்து என் மகன் பிறந்த போது அவர்கள் வேறு நடிகையை எனக்கு பதிலாக நடிக்க வைத்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் எனக்கும் என் கணவருக்கும் பல பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்பட்டு சண்டை வரை சென்றது. அவர் என்னிடம் என் அம்மா வளர்ப்பு சரியில்லை என்று கூறிய அந்த ஒற்றை வார்த்தையை கேட்ட பின் முடிவெடுத்து விட்டேன்.

திருமணமாகி ஓராண்டுக்குள்ளையே எங்களுக்குள் பிரச்சனைகள் பூதாகரமாக வந்து விட்டது. எனது அம்மா ஒரு சிங்கிள் மதர். அப்பா இருந்தாலும் இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்கள். என் அம்மாவை நான் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

அதற்காக நான் அவர் பேசியதையும் குறை சொல்லவில்லை. அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டால் உண்மை என்ன என்பது பலருக்கும் தெரியும். இந்த வகையில் என்னை பலரும் பல வகைகளில் விமர்சித்தார்கள்.

இன்று நான் நன்றாகவே இருக்கிறேன். இதைப் பற்றி என் உறவினர்களிடம் நான் எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது. அவர் என்னை அடித்திருக்கிறார் திருப்பி நானும் அடித்திருக்கிறேன். இதற்குப் பிறகும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற ஒரு நிலை எட்டியவுடன் தான் பிரிந்து விட்டேன்.

நடிகைகள் ஒழுங்காக சேர்ந்து வாழ மாட்டார்கள் எனக் கூறுவார்கள். அது உண்மை தான் போல என் மகன் பிறந்த இரண்டாவது மாதத்திலேயே உயிர் வாழ விரும்பாமல் தவறான முடிவுக்கு சென்று விட்டேன். இதனை அடுத்து 10 நாட்கள் ஐசியூ-வில் இருந்தேன்.

என்னை விமர்சிப்பது மிகவும் எளிதான விஷயம். ஆனால் என் வாழ்க்கைக்குள் வந்து பார்த்தால் அதன் வழி என்ன என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும் என்று ஓபனாக பேசியிருக்கும் நடிகை கிருத்திகா அண்ணாமலைக்கு அனைவரும் ஆறுதல் தரக்கூடிய வார்த்தைகளை சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version