“இரவு தூங்கும் முன்பு ஆண் நண்பருடன்..” கூச்சமே இல்லாமல் கூறிய லட்சுமி மேனன்..!

பிரபு சாலமன் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கும்கி. இந்த படத்தில் நடிகர் பிரபு மகன், சிவாஜி கணேசன் பேரன் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

அதே போல் இந்த படத்தில், ஆதிவாசி பெண்ணாக லட்சுமி மேனன் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.

முதல் படத்திலேயே தனது அபாரமான அழகால், சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார் லட்சுமி மேனன்.

லட்சுமி மேனன்..

கும்கி படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு லட்சுமி மேனனுக்கு அமைந்தது, குறிப்பாக முத்தையா இயக்கிய படங்களில் அவர் அதிகமாக நடித்தார்.

கொம்பன், புலிக்குத்தி பாண்டியன், குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன், ரெக்க, சந்திரமுகி 2 என பல படங்களில் நடித்தார்.

முதலில் ஸ்லிம் ஆக இருந்த லட்சுமி மேனன், ஒரு கட்டத்தில் சற்று பருமனாகி விட்டார். குறிப்பாக ரெக்க படத்தில் மிக குண்டாக அவர் காணப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு படங்களில் வாய்ப்பு குறைந்து போனது. இப்போது வெப் சீரிஸ்களில் நடிக்க அவர் வாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சின்ன வயதில் ஒரு தவறு செய்து அப்போது அம்மாவிடம் சிக்கிக் கொண்டேன் என்று ஒரு தகவலை லட்சமி மேனன் கூறியிருக்கிறார்.

ஆண் நண்பருடன் அரட்டை..

பள்ளியில் படிக்கும் பொழுது இரவு தூங்கும் முன்பு ஆண் நண்பருடன் பேசுவது வழக்கம். போர்வையை போர்த்திக் கொண்டு தொலைபேசியில் பேசுவேன்.

ஒரு முறை அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய போர்வைக்குள் இருந்து வந்த வெளிச்சத்தின் காரணமாக என் அம்மா நான் போன்தான் பேசுகிறேன் என்பதை கண்டறிந்து விட்டார்.

திடீரென போர்வையை எடுத்து பார்த்தார் பயந்து போன நான் அதோடு தூங்குவதற்கு முன்பு அந்த நண்பருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன் எனக் கூறியிருக்கிறார் லட்சுமிமேனன்.

இரவு தூங்குவதற்கு முன்பு ஆண் நண்பருடன் அரட்டையடித்து கூச்சமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்த லட்சுமிமேனன், தனது அம்மாவுக்கு தெரிந்த பிறகுதான் அந்த தவறான பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version